2018 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக ஹூண்டாய் ஐயோனிக் பிளக்-இன் ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஐயோனிக் ஹைபிரிட் கார் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் மாடலாகும்.
ஹூண்டாய் ஐயோனிக்
- 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- ஹூண்டாய் ஐயோனிக் மூன்று விதமான ஹைபிரிட் ஆப்ஷனில் சர்வதேச அளவில் கிடைக்கின்றது.
ஹைபிரிட் , பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான வேரியண்டில் ஐயோனிக் கார் விற்பனைக்கு சர்வதேச அளவில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டீசல் கார்களுக்கு தடை மற்றும் ஃபேம் (FAME – Faster Adoption and Manufacturing Electric and hybrid vehicles) திட்டத்தின் கீழ் சலுகையை பெற்று சவாலான விலையில் விற்பனை செய்ய ஏற்ற காராக விளங்க உள்ள ஐயோனிக் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஃபேம் திட்டத்தின் கீழ் சியாஸ் SHVS மற்றும் டொயோட்டா கேம்ரி போன்ற கார்களுக்கு சிறப்பான விலை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஐயோனிக் காரில் மூன்று விதமான இஞ்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ள நிலையில் 1.6 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் இஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹைபிரிட் ரகத்தில் பேட்டரி மற்றும் இஞ்ஜின் இனைந்து 141 hp ஆற்றலை வெளிப்படுத்தும்.
இதுதவிர பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷனில் 1.6 லிட்டர் இஞ்ஜின் ஆப்ஷனுடன் இனைந்த 8.9 கிலோவாட் பேட்டரி வாயிலாக 50 கிமீ வரை எலக்ட்ரிக் டிரைவில் பயன்படுத்தலாம்.
முழுமையான எலக்ட்ரிக் ஐயோனிக் காரில் 250கிமீ தொலைவு வரை பயணிக்கும் வகையில் 28 KWh லித்தியம் ஐன் பாலிமர் பேட்டரியை பெற்றுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஐயோனிக் அடுத்த வருடத்தின் வெளிவரலாம்.