ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்கோடா விஷன் எஸ் கான்செப்ட் எஸ்யூவி காரில் 6 இருக்கைகள் கொண்ட மாடலாக விஷன் S கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகளுடன் விஷன்எஸ் விளங்குகின்றது.
வருகின்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள விஷன்எஸ் எஸ்யூவி காரானது ஃபோக்ஸ்வேகன் MQB தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. செக் கியூபிஸம் மற்றும் போகிமியன் பாரம்பரிய கிரிஸ்டல் ஆர்ட் போன்றவற்றின் உந்துதலில் உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தில் மிக ஒல்லியான முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய கிரிலுடன் முகப்பு விளக்குகளுக்கு அருகாமையிலே பனி விளக்குகளை பெற்றுள்ளது. 4700மிமீ நீளம் , 1910மிமீ அகலம் மற்றும் 1680 உயரத்தினை பெற்றுள்ளது. 1.4 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் பெற்றிருக்கும். இதன் ஆற்றல் 222 hp வரை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்ச் 1ந் தேதி தொடங்க உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள விஷன் S கான்செப்ட் எஸ்யூவி இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.