மாருதி சுசூகி பலேனோ RS கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பலேனோ காரின் ஸ்போர்ட்டிவ் மாடலாக பலேனோ ஆர்எஸ் விளங்கும்.
பெலினோ சாதரன மாடலுக்கும் ஆர்எஸ் மாடலுக்கும் வித்தியாசத்தினை தரும் வகையில் முன்பக்க கிரில் , பம்பர் மற்றும் பாடிகிட் போன்றவே புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புற பம்பர் , புதிய அலாய் வீல் போன்றவற்றை கொண்டு மாறுபட்டுள்ளது.
பலேனோ ஆர்எஸ் கார் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 110 hp மற்றும் டார்க் 170 Nm ஆக இருக்கும். இதே ஆற்றலில் ஐரோப்பாவில் பலேனோ ஆர்எஸ் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஆண்டின் மத்தியில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசூகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா , இக்னிஸ் , பலேனோ ஆர்எஸ் போன்ற மாடல்களை முன்னிலைப்படுத்தியுள்ளது. மற்ற மாடல்களான எஸ் க்ராஸ் ப்ரிமா எடிசன் , ஸ்விஃப்ட் டிசையர் ஏஜிஎஸ் போன்ற மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.
மேலும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 விபரங்களை படிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்…
[envira-gallery id="7137"]