டிவிஎஸ் X21 கான்செப்ட் பைக் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் X21 கான்செப்ட் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4V பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும்.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை அடிப்படையாக கொண்ட எக்ஸ் 21 கான்செப்ட் பைக் பாதி ஃபேரிங் செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளது. அப்பாச்சி 200 பைக்கிற்கு மேலாக ரேசிங் பிரிவு மாடலாக இதனை நிலைநிறுத்த வாய்ப்புகள் உள்ளது.
டிவிஎஸ் ரேசிங் பிரிவால் பல நவீன நுட்பங்கள் புகுத்தப்பட்ட மாடலாக காட்சியளிக்கும் எக்ஸ்-21 மாடலில் 212.4சிசி 4 வால்வு ஏர் கூல்டு FI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ட்வின் ஃபுளோ ஏர் ஃபில்டர் , ட்வின் ஃபீரீ ஃபுளோ கேனிஸ்டர் போன்றவற்றை பெற்றிருக்கும்.
மேலும் இது அப்பாச்சி 200 பைக்கினை அடிப்படையாக கொண்ட ரேசிங் மாடல் என்பதனால் அதனை விட ஆற்றல் மிக கூடுதலாக இருக்கும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோசாக் கேஸ் ஃபீல்டு ஸ்வின்கிராம் , இலகுஎடை காம்பேகட் சேஸீயை பெற்றிருக்கும்.
[envira-gallery id="7123"]