இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள வோக்ஸ்வேகன் டி-கிராஸ் எஸ்யூவி மாடல் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட உள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் டி கிராஸ் உட்பட நான்கு கார்களை முதன்முறையாக இந்தியாவில் வோக்ஸ்வேகன் காட்சிப்படுத்த உள்ளது.
வோக்ஸ்வேகன் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஸ்கோடா வெளியிட்டிருந்த விஷன் இன் கான்செப்ட் பிளாட்ஃபாரத்தினை வோக்ஸ்வேகன் டி கிராஸ் காரும் பகிர்ந்து கொள்ள உள்ளது. இங்கே குறிப்பிடதக்கதாகும். சர்வதேச அளவில் சில நாடுகளில் கிடைக்கின்ற டி-கிராஸ் காரின் வடிவ தாத்பரியங்களை இந்த எஸ்யூவி பெறக்கூடும்.
உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள இந்த மாடலில் 114bhp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 148bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகியவை இடம்பெறலாம். இந்த காரில் டீசல் என்ஜின் இடம்பெறும் வாய்ப்பில்லை. இந்தியாவில் பிரபலமாக விளங்குகின்ற ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட போட்டியாளர்களை இந்த எஸ்யூவி கார் எதிர்கொள்ள உள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வரவுள்ள வோக்ஸ்வேகனின் டி கிராஸ் காரின் அறிமுகம் 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியிடப்படலாம். இதுதவிர இந்நிறுவனம், டி-ராக், டிகுவான் ஆல் ஸ்பேஸ், மற்றும் எலக்ட்ரிக் ID.கிராஸ் போன்ற மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.