நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்களை பெற்றதாக வரவுள்ள டிவிஎஸ் க்ரியோன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது.
ஸ்மார்டான முறையில் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான மொபைல் ஆதரவுடன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக வரவுள்ள இந்த ஸ்கூட்டரில் 3 லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற 12 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0-60 கிமீ வேகத்தை மணிக்கு எட்டுவதற்கு 5.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இதில் இடம்பெற உள்ள பேட்டரி 80 சதவீத சார்ஜிங் ஆவதற்கு அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும், சிரியோன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80 கிமீ தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் மோட்டார் தயாரிக்க உள்ள க்ரியோன் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள தொழிற்நுட்பம் சார்ந்த ஆதரவு நுட்பத்தின் வாயிலாக ஸ்மார்ட் மொபைல்கள் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பேட்டரி சார்ஜர், சர்வீஸ் ரிமைன்டர், டாக்கோமீட்டர் ஆகியவற்றுடன், க்ரியோன் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட உள்ள ஆப் வாயிலாக ரீஜெனேர்ட்டிவ் பிரேக்கிங், பார்க்கிங் அசிஸ்ட், ஜிபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டரில் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வந்துள்ளது.
இதைத் தவிர டி.வி.எஸ் ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை என்டார்க் 125, டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர், அப்பாச்சி RTR 200 Fi எத்தனால் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.