டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் டொயோட்டா க்ரிலோஸ்கர் நிறுவனம், இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் காம்பேக்ட் செடான் காரை அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டள்ள நிலையில் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
டொயோட்டா யாரிஸ்
இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்கும் காம்பேக்ட் ரக செடான் கார்களான ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த 6-8 வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள யாரிஸ் செடான் கார் பற்றி தொடர்ந்து அறிவோம்.
கரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள யாரிஸ் செடான் மிக நேர்த்தியான தோற்ற அமைப்புடன் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது. இந்த காரில் முதற்கட்டமாக 108 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தகப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும், டீசல் எஞ்சின் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.
காம்பேக்ட் ரக செக்மெட்டில் பல்வேறு வசதிகளை முதன்முறையாக பெற உள்ள யாரிஸ் செடான் காரில் குறிப்பாக 7 காற்றுப்பைகள் , 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், கூரையில் ஏசி வென்ட், எல்இடி விளக்கு பின்புற பயணிகளுக்கு, ஓட்டுநர் இருக்கையை மாற்றியமைக்கும் வசதி மற்றும் பார்க்கிங் சென்சார் உட்பட ஏபிஎஸ், இபிடி, புராஜெக்டர் ஹெட்லேம்ப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.
பணத்திற்கு ஏற்ற மதிப்பினை வழங்கும் டொயோட்டா கார்களில் யாரிஸ் மிக முக்கிய பங்காற்ற வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 6-8 வாரங்களுக்குள் டொயோட்டா யாரிஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது.