இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் 6 வாகனங்களை காட்சிப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா எலெக்ட்ரிக் வாகனங்கள்
வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் 26 ஸ்மார்ட் வாகனங்களை காட்சிப்படுத்த உள்ள நிலையில் , அவற்றில் 6 வாகனங்கள் முழுமையான மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்கள் என டாடா உறுதிப்படுத்தியுள்ளது.
இவற்றில் மத்திய ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்துக்கு முதற்கட்டமாக 350 கார்களை சப்ளை செய்யும் ஆர்டரை டாடாவும், 150 கார்களை சப்ளை செய்யும் ஆர்டரை மஹிந்திரா நிறுவனமும் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்படும் மின்சார வாகனங்களின் முதல் பேட்ஜ் உற்பத்தியை டாடா நிறுவனத்தின் சனந்த தொழிற்சாலையில் மேற்கொண்டது குறிப்பிடதக்கதாகும்.
6 மின்சார வாகனங்களை தவிர, டாடா X451, டாடா H5 எஸ்யூவி, டிகோர் ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் உட்பட பல்வேறு மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.