இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சுஸூகி இந்தியா, வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் காட்சிக்கு 17 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், புதிய சுஸூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் முன்னணி மாடலாக விளங்கும்.
சுஸூகி இந்தியா – ஆட்டோ எக்ஸ்போ 2018
வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் ஹால் எண் 2யில் சுஸூகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை காட்சிக்கு வெளிப்படுத்த உள்ளது.
சுஸூகி நிறுவன அரங்கில் மிக முக்கியமாக புதிய பிரிமியம் ரக 125சிசி அல்லது 150சிசி எஞ்சின் பெற்ற சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுவதுடன் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இதுதவிர,இந்த அரங்கில் இந்நிறுவனத்தின் ஆக்செஸ் வரிசை ஸ்கூட்டர்கள்,ஜிக்ஸெர் வரிசை மற்றும் இந்தியாவில் உதிரிபாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற மாடல்கள், டிர்ட் பைக்குகள் மற்றும் மோட்டோ ஜிபி ரேஸ் பைக்குகளும் காட்சிக்கு வரவுள்ளது.
இந்திய சந்தையில் பிரிமியம் ரக மாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள சுசூகி ஆட்டோ எக்ஸ்போவில், உயர்ரக வி-ஸ்ட்ரோம் 650, GSX-S750 ஆகிய மாடல்களையும் காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகள் படிங்க