இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி , இன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் டிவிஎஸ் என்டார்க் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது.
டிவிஎஸ் என்டார்க்
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வரவுள்ள இந்த புதிய ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலிஷாக மிக சிறப்பான எக்ஸ்ஹாஸ்ட் நோட் கொண்டதாக விளங்க உள்ளது.
கிரேஸியோ உட்பட வரவுள்ள 125 சிசி ஸ்கூட்டர்களுக்கு மிகவும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் நவீனத்துவமான வடிவமைப்பை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த ஸ்கூட்டரில் 11.5 பிஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ஜிபிஎஸ் சிஸ்டம், எல்இடி டர்ன் இன்டிகேட்டர், வெளிபுறத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி, இருக்கையின் அடிப்பகுதியில் மிக சிறப்பான இடவசதி ஆகியவற்றுடன் மொபைல் சார்ஜில் போர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஸ்கூட்டரில் ஸ்டைலிஷான 12 அங்குல அலாய் வீல், சிறப்பான அமைப்பை கொண்ட இருக்கை கொண்டிருக்கும், என்டார்க் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டதாக வரவுள்ளது.
இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் விலையில் ரூ.73,000 விலையில் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதை தவிர இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் புரோட்டோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட பல்வேறு புதிய மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.