வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் , 6 மின்சார வாகனங்கள் உட்பட 20 க்கு மேற்பட வாகனங்களை காட்சிப்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா ஆட்டோ எக்ஸ்போ 2018
இந்தியாவின் முதன்மையான யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போவில் 6 மின்சார வாகனங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
வாகன கண்காட்சியில் இன்னோவா கிறிஸ்டா, ஹெக்ஸா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள மஹிந்திரா U321 எம்பிவி காரின் உற்பத்திநிலை மாடலை காட்சிப்படுத்த உள்ளது. இதனை தொடர்ந்து, எஸ்101 என்ற பெயரில் டிவோலி எஸ்யூவி அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவி கார் மற்றும் எக்ஸ்யூவி500 ஏரோ மாடலை பின்னணியாக கொண்ட மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்டபிள் எஸ்யூவி மாடலும் காட்சிக்கு வரவுள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் ஆகிய பிரிமியம் மாடல்களை எதிர்கொள்ள சாங்யாங் LIV-2 கான்செப்ட் அடிப்பையிலான எக்ஸ்யூவி700 எஸ்யூவி அறிமுகம் செய்ய உள்ளது.