2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் மஹிந்திரா நிறுவனம் இ கேயூவி100, எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் உட்பட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்கள், புதிய தார், எக்ஸ்யூவி 500 போன்ற கார்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரூ.9 லட்சத்திற்குள் சிறப்பான ரேஞ்சு வழங்கக்கூடிய மாடலாக வரவுள்ள eKUV100 எலக்ட்ரிக் காரில் 130 -180 கிமீ ரேஞ்சு வழங்கும் திறன் பெற்ற பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற எக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்சு 300 கிமீ கூடுதலாக விளங்கும். ஃபோர்டின் ஆஸ்பயர் செடான் ரக மாடலின் அடிப்படையிலான எலக்ட்ரிக் செடானும் வரவுள்ளது.
இதுதவிர, எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் மாடலாக மஹிந்திரா ஆட்டாம் (atom) உட்பட டிரியோ மூன்று சக்கர வாகனத்தின் அடிப்படையிலான வர்த்தக பயன்பாட்டு மின்சார வாகனம் ஆகிய மாடல்களுடன் புதிய வர்த்தக ரீதியான எலக்ட்ரிக் கான்செப்ட்கள் வெளியாகும்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் புதிய தலைமுறை தார் எஸ்யூவி, ஃபோர்டு மஹிந்திரா கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 உட்பட புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 18 க்கு மேற்பட்ட வாகனங்கள் காட்சிக்கு வைக்க உள்ளது.