2018 ஆட்டோ எக்ஸ்போவில் 50க்கு அதிகமான எலக்ட்ரிக் கார்கள், எஸ்யூவி, இலகுரக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா eKUV100 எஸ்யூவி மாடலும் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா eKUV100 எஸ்யூவி
மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே மின்சாரத்தில் இயங்கும் கார்கள், எஸ்யூவி மற்றும் இலகுரக வரத்தக வாகனங்கள் மீதான கவனத்தை அதிகரித்து விற்பனை இலக்கை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பிரபலமான மினி எஸ்யூவி மாடலாக விளங்கும் கேயூவி100 மாடலை அடிப்படையாக கொண்ட பேட்டரியில் இயங்கும் முதல் மின்சார எஸ்யூவி மாடலாக இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வரவுள்ள இகேயூவி100 சாதாரண மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 30 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 140 கிமீ தொலைவு வரை செல்லும் திறன் கொண்டதாக விளங்கும். 80 சதவீத சாரஜ் ஏறுவதற்கு சுமார் 60 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் விரைவு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்யூவி மாடலில் ஸ்மார்ட்போன் ஆதரவு, கேபின் ப்ரீ-கூலிங், நேரலையில் வாகனத்தின் நிலை மற்றும் பேட்டரி தரத்தை அறிய உதவும், ரிமோட் வாயிலாக பிரச்சனைகளை அறிவது உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும்.
இந்த வருடத்தின் இறுதி அல்லது 2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் மஹிந்திரா eKUV100 விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.