ஹூண்டாய் இந்தியா நிறுவனம், வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் ஹூண்டாய் கோனா, ஹூண்டாய் ஐயோனிக் எலெக்ட்ரிக் ஆகிய மாடல்களுடன் 14 மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.
ஹூண்டாய் – ஆட்டோ எக்ஸ்போ 2018
இந்தியாவில் 20 ஆண்டுகாலமாக ஹூண்டாய் நிறுவனம் கார்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்குகின்றது.
அடுத்த ஆண்டின் மத்தியில் முழுமையான மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் வாகனம், ஐயோனிக் எலெக்ட்ரிக் கார் , இயான், கிராண்ட் ஐ10, வெர்னா, எலக்ட்ரா, டூஸான் , சான்டா ஃபீ போன்ற மாடல்களை காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர , இந்நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக N பேட்ஜ் கொண்ட வோலோஸ்டார் N, i30 N ஆகிய மாடல்களுடன் புதிய ஹேட்ச்பேக் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் ஹால் 3 அரங்கில் ஹூண்டாய் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.