வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி தொடங்க உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா இந்தியா நிறுவனம், புதிய பிரிமியம் ரக ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா இந்தியா – ஆட்டோ எக்ஸ்போ 2018
2018 ஆம் ஆண்டில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஹோண்டா நிறுவனம், இந்த மாடல்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிரிமயம் ரக ஸ்கூட்டர் ஒன்றை தவிர , ஸ்டைலிஷான கம்யூட்டர் பைக் மாடலை தவிர பிரிமியம் ரக ஹோண்டா ரீபெல் 300 க்ரூஸர் பைக் மாடலை காட்சிக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகின்ற நிலையில், எந்த விபரத்தையும் ஹோண்டா இதுவரை வெளியிடாமல் உள்ளது.
ஸ்கூட்டர் சந்தையில் முன்னணி வகிக்கும் ஹோண்டா நிறுவனம், 100-125சிசி சந்தையில் புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. மேலும் 150-160சிசி சந்தையில் யூனிகார்ன், சிபி ஹார்னெட் ஆகிய மாடல்கள் அமோக வரவேற்பினை பெற்றிருக்கும் நிலையில், இவற்றை விட பிரிமியம் பைக்குகளை காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
இதை தவிர, இந்நிறுவனம் ஹோண்டா சிபி150 ஆர் மற்றும் சிபி250 ஆர் ஆகிய பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போ செய்திகள் படிக்க ;-
Auto Expo 2018 News & Updates in Tamil