வருகின்ற பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு எதிரான ஹோண்டா ரீபெல் 300 பைக் இந்தியா சந்தையில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹோண்டா ரீபெல் 300
சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கான காப்புரிமை சார்ந்த செயல்பாட்டை மேற்கொண்டுள்ள ஹோண்டா இந்தியா நிறுவனம் ரீபெல் 300 மற்றும் ரீபெல் 500 ஆகிய இரு மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கான்செப்ட் நிலை ஹோண்டா ரீபெல் 300 மற்றும் ரீபெல் 500 ஆகிய மாடல்கள் காட்சிப்படுத்தப்படலாம், அதனை தொடர்ந்து முதற்கட்டமாக ரீபெல் 300 மாடல் அடுத்த ஆண்டின் இறுதி மாதங்களிலும்,அதனை தொடர்ந்து ரீபெல் 500 பைக் களமிறங்கலாம்.
சிபிஆர்300 ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ள 286cc திறன் பெற்ற எஞ்சின் 27 HP ஆற்றலுடன் 27 NM டார்க்கினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த பைக் மாடல் விலை ரூ.1.90 லட்சத்தில் அமைந்திருக்கலாம்.
ஹோண்டா தொடர்ந்து பல்வேறு பிரிமியம் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான காப்புரிமையை மேற்கொண்டாலும் இந்த மாடல் அறிமுகம் எப்போது என்பதனை இதுவரை குறிப்பிடவில்லை.