பேர்டு குழுமத்துடன் இணைந்து சீனாவின் பழமையான FAW ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஹைய்மா எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.
சிறிய ரக ஸ்மார்ட் சிட்டி கார் ஸ்டைலை பெற்றள்ள ஹைய்மா E1 இவி மாடலில் 34 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 54 ஹெச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் வெளிப்படுத்தும் மின்சார மோட்டாரைக் கொண்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களுடன், ஹைய்மா இ1 இவி காரின் வேகம் அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணித்தால் 352 கிமீ வரை செல்ல இயலும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹைய்மாவின் இந்தியா அறிமுகம் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் E1 EV காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேர்டு எலக்ட்ரிக் இ1 இவி காரை உதிரி பாகங்களை தருவித்து மானேசரில் உள்ள ஆலையில் ஒருங்கிணைக்க உள்ளது. ஹைய்மா இ1 இ.வி விலை ரூ .10 லட்சத்திற்குள் இருக்கலாம்.
ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ஹைய்மா 7எஸ் மற்றும் 8எஸ் போன்ற மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.