ஒரு முறை சார்ஜில் 100 கிமீ ரேஞ்சு வழங்கவல்ல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரா T7 EV மின்சார டிரக் மாடல் முதன்முறையாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. இதுதவிர டாடா நிறுவனம் 1 டன் முதல் 55 டன் வரையிலான அனைத்து டிரக்குகள், பேருந்துகளில் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிட்டுள்ளது.
எதிர்கால நகர்புற சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றதாக வெளியிடப்பட்டுள்ள டி7 இவி டிரக்கில் அதிகபட்சமாக 4.9 டன் சுமை தாங்கும் திறன் கொண்டதாக வந்துள்ள அல்ட்ரா டி7 இவி டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள 62.5 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் அதிகபட்சமாக 220 கிலோவாட் பவர் மற்றும் 2800 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய இயலும்.
அல்ட்ரா டி 7 எலக்ட்ரிக் டிரக் நகர போக்குவரத்திற்கு சிறப்பான வாகனம் என்று கூறப்படுவதால் இது பல்துறை திறன் வாய்ந்தது. ஸ்டைலான கேபின் ஒரு அம்சத்தைக் கொண்டு 1 + 2 இருக்கை அமைப்பினை கொண்டுள்ளது. ஆபரேட்டர்களின் தேவைகளுக்கு ஏற்ப, டாடா அல்ட்ரா டி 7 எலக்ட்ரிக் சிறந்த அல்ட்ரா இயங்குதளத்திலிருந்து பெறப்பட்ட ஓட்டுநருக்கு ஏற்ற வழங்கும் என்று கூறப்படுகிறது.
ஐ.சி.வி எனப்படுகின்ற இடைநிலை வர்த்தக வாகன பிரிவில் பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் முதல் இந்திய டிரக் மாடாலாக டாடா அல்ட்ரா டி7 விளங்குகின்றது.