இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பபாளரான சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பிஎஸ்6 சுஸூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 அறிமுகம் பைக்குகளை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்6 பைக்குகளின் விலை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட உள்ளது. முன்பாகவே இந்நிறுவனம் சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் பிஎஸ்6 என்ஜினை கொண்டதாக விற்பனை செய்து வருகின்றது.
இரண்டு 250சிசி பைக்குகளிலும் சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் எஸ்ஓசிஎஸ் மூலம் வாகனத்தின் எடை அதிகரிக்காமல் இலகு எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
இரண்டு 155சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸெர் மாடல்களிலும் 13.6 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 13.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
250சிசி என்ஜினை பொறுத்தவரை பவர குறைக்கப்படவில்லை. ஆனால் 155சிசி என்ஜின் மாடல் பவர் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனம் இன்ட்ரூடர் 150 மற்றும் பர்க்மேன் ஸ்கூட்டர் மாடலை பிஎஸ்6 முறைக்கு வெளியிட்டுள்ளது.