Auto Expo 2020: மஹிந்திரா காட்சிப்படுத்தியுள்ள புதிய ஃபன்ஸ்டெர் (Mahindra Funster) எலெக்ட்ரிக் கான்செப்ட் மூலம் மிகவும் ஸ்டைலிஷான தனது எதிர்கால கார்களின் டிசைன் தாத்பரியத்தை இந்த கான்செப்டில் இருந்து பெற உள்ளது. குறிப்பாக வரவள்ள புதிய எக்ஸ்யூவி 500 முகப்பு இந்த மாடலை போல அமைந்திருக்கலாம்.
ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்நிறுவனம் காட்சிப்பட்டுத்தியுள்ள புதிய எக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்த கான்செப்டின் தாத்பரியங்களை கொண்டுள்ளது. 5 இருக்கை கொண்டதாக காட்சிக்கு வந்துள்ள ஃபன்ஸ்டர் முகப்பில் மஹிந்திராவின் பாரம்பரிய கிரிலுக்கு புதிய வடிவமைப்பினை கொடுத்திருப்பதுடன் ஒளிரும் வகையிலான அம்சத்தை இணைத்துள்ளது.
இந்த மாடலில் 60 கிலோவாட் பேட்டரி மற்றும் நான்கு மின்சார மோட்டார் பொருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு மோட்டார் இருக்கும். ஒருங்கிணைந்த பவர் 312 பிஹெச்பி வெளிப்படுத்தும் வெறும் 5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடன் சிங்கிள் சார்ஜில் 520 கிமீ பயணிக்கலாம்.
மஹிந்திரா ஃபன்ஸ்டர் எலக்ட்ரிக் கான்செப்ட் கார் உற்பத்தி நிலை மாடலாக எக்ஸ்யூவி500 எலெக்ட்ரிக் வெர்ஷன் காராக வரக்கூடும்.