க்விட் காரின் ரெனால்ட் K-ZE எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2020

k-ze electric

ரெனால்ட் கவிட் அடிப்படையிலான K-ZE எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளத. இதுதவிர இந்நிறுவனம் ஸோயி இவி, ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மற்றும் ரெனோ காம்பேக்ட் எஸ்யூவி காரை வெளியிட்டுள்ளது.

ரெனால்ட் சிட்டி கே-இசட்இ எல்க்ட்ரிக் காரில் 26.8 கிலோவாட் பேட்டரி மற்றும் 33 கிலோ வாட் மின்சார மோட்டாரை பெற்றுள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 271 கிமீ (NEDC) ரேஞ்சை வழங்குகிறது. மிக வேகமான சார்ஜிங் முறையில் K-ZE காருக்கு 50 நிமிடங்களில் 0-80% வரை சார்ஜ் செய்ய இலும். அதே நேரத்தில் சாதாரண ஏசி சார்ஜரில் 100% பேட்டரி சார்ஜ் அடைய 4 மணிநேரம் ஆகும்.

பெட்ரோல் மாடலுக்கும் எலெக்ட்ரிக் மாடலுக்கும் தோற்ற அமைப்பில் குறிப்பிடதக்க பல்வேறு வித்தியாசங்களை முகப்பில் கொண்டுள்ளது. குறிப்பாக முன்புற கிரில் அமைப்பு மற்றும இரு பிரிவை பெற்ற ஹெட்லைட் கொண்டுள்ளது.

K-ZE காரின் இன்டிரியரில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு  ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இரட்டை-முன் ஏர்பேக்குகள், ஒரு டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பின்புற பார்க்கிங் கேமராவுடன் வரவுள்ளது.

K-ZE மின்சார ஹேட்ச்பேக் “அடுத்த 2 ஆண்டுகளுக்குள்” இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ரம் தெரிவித்தார். க்விட் இவி காரின் விலை ரூ.8 லட்சத்திற்குள் துவங்கலாம்.