சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் 2021 ஆம் ஆண்டு தனது கார்களை ஹவால் பிராண்டில் வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் H பிளக் இன் ஹைபிரிட் எஸ்யூவி உட்பட பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்டுள்ள ஹவல் பிராண்டில் எஸ்யூவி கார்கள் உட்பட தனது எதிர்கால திட்டங்களை அறிவித்துள்ள இந்நிறுவனம், இந்தியாவில் ரூ. 7,112 கோடிஅளவிலான முதலீட்டை மேற்கொள்கின்றது. முதற்கட்டமாக பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் வெளியிடப்பட உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஹவால் கான்செப்ட் ஹெச் மாடலில் மிக அகலமான க்ரோம் பூச்சை பெற்ற முன்புற கிரிலை பெற்று மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்றதாக உள்ளது. T வடிவிலான டெயில் லைட் மற்றும் பெரிய அலாய் வீல் கொண்டிருப்பதுடன், இன்டிரியரை பொறுத்தவரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃபிரீ ஸ்டாண்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டதாகவும் இரட்டை வண்ண நிறத்தை பெற்றுள்ளது. இந்த காரின் மேற்கூறையில் அகலமான பனோரமிக் சன்ரூஃப், முன்புற மோதல் எச்சரிக்கை அமைப்பு மற்றும் ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மற்றபடி பிளக் இன் ஹைபிரிட் நுட்பவிபரம் வெளியிடவில்லை.
கிரேட் வால் மோட்டார் தனது இந்தியா தயாரிப்புத் திட்டங்களை வெளியிடவில்லை, ஆனால் 2021 ஆம் ஆண்டில் தனது இந்திய விற்பனையை தொடங்குவதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.