Author: நிவின் கார்த்தி

நான் நிவின் கார்த்தி கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். பகுதி நேரமாக ஆட்டோமொபைல் தொடர்பான கார், பைக் செய்திகளை தற்போது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

upcoming renault ev and new suvs

ரெனால்ட் இந்தியா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனம் உட்பட 5 கார்களை விற்பனைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டஸ்ட்டர், 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெர் ஆகிய இரண்டு மாடல்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் ரெனால்ட் கூடுதல் வசதிகளை பெற்ற ட்ரைபர், க்விட் மற்றும் கிகர் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த வாகனங்களின் அதிகப்படியான பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்படுகின்றது. Upcoming Renault Models அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரெனால்ட் இந்தியா  தனது முதல் EV மாடலை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக க்விட் காரின் அடிப்படையிலாக அமைந்திருப்பதுடன் துவக்கநிலை எலக்ட்ரிக் சந்தைக்கு ஏற்ற மாடலாகவும், உள்நாட்டிலே 85-90% உதிரிபாகங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதால் விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கலாம். இந்த மாடல் அனேகமாக 2025 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புள்ளது. ரெனால்ட் டஸ்ட்டர், பிக்ஸ்டெர் 5 இருக்கை பெற்ற B+ பிரிவில்…

Read More
mg astor suv

ரூ.9.98 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள 2024 எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரில் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட்டு மற்றும் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. கிரெட்டா, கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், செல்டோஸ், எலிவேட் உள்ளிட்ட எஸ்யூவிகளுடன் சி3 ஏர்கிராஸ் ஃபோக்ஸ்வேகன் டைகன், குஷாக் ஆகியவற்றை ஆஸ்டர் எஸ்யூவி எதிர்கொள்ளுகின்றது. 2024 MG Astor இரு விதமான என்ஜினை பெறும் எம்ஜி ஆஸ்டரில் 110 hp பவர் மற்றும் 150 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 hp பவர் மற்றும் 220 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் 6 வேக  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கின்றது. i-SMART 2.0 பயனர் இடைமுகத்தை பெறுகின்ற 10.1 அங்குல இன்ஃபோடெயின்மெட் சிஸ்டத்தில் 80க்கு மேற்பட்ட கனெக்ட்டிவ் வசதிகளுடன் ஜியோ-இயங்கும் குரல்…

Read More
2024 kia sonet suv launched

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள மேம்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான கியா சொனெட் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.15.69 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் உள்ள மிக கடுமையான போட்டியாளர்களில் ADAS நுட்பத்தை பெற்ற இரண்டாவது மாடலாகும். சொனெட் எஸ்யூவி மாடலில் கொடுக்கப்பட்டுள்ள அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பு ஆனது முதல்நிலை அம்சங்கள் பெற்றுள்ளது. கடந்த 20 ஆம் தேதி முதல் இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 2024 Kia Sonet சொனெட்டில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில்  HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் மொத்தமாக 11 விதமான நிறங்களில் கிடைக்கின்றது. 82 hp பவர், 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மட்டுமே…

Read More
new creta suv

ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா எஸ்யூவி காரை 16 ஜனவரி 2024 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் டீலர்களுக்கு அனுப்ப துவங்கியுள்ளதால் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வகையில் இன்டிரியர் தொடர்பான படங்களும் கிடைத்துள்ளது. இந்திய சந்தையில் 8 ஆண்டுகளாக கிரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்று லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 2024 Hyundai Creta interior 2024 ஆம் ஆண்டிற்கான கிரெட்டா மாடல் தொடர்பான இன்டிரியர் படங்களை அதிகார்ப்பூர்வமாக ஹூண்டாய் வெளியிட்டிருந்த பொழுதும் புதிய கார்கள் டீலர்களை வந்தடைந்துள்ளதை தொடர்ந்து சில படங்கள் கிடைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரில் இரண்டு பிரிவுகளை கொண்ட 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெறுவதன் மூலம் 70க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவற்றுடன் தொடும் வகையிலான HVAC சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளது. செல்டோஸ் காரில் உள்ள வசதிகளுடன் போட்டியாக…

Read More
2024 mahindra xuv400 pro

மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான அம்சங்களை பெற்றுள்ளது. XUV400 புரோ காரில் தற்பொழுது  34.5 kWh பேட்டரி பெற்ற ஆரம்பநிலையிலும் பல்வேறு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர டாப் வேரியண்டில் 39.4 kWh பேட்டரி உள்ளது. 2024 Mahindra XUV400 Pro புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்தை பெற்ற டாஷ்போர்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரட்டை-மண்டல ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோலுக்கு புதிய பட்டன்கள் மற்றும் கைப்பிடிகளுக்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கபட்டுள்ளது. காரின் சென்டர் கன்சோலின் மேற்புறத்தில் புதிதாக உள்ள 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 50 க்கும் மேற்பட்ட AdrenoX இணைக்கப்பட்ட கார் என பல்வேறு…

Read More
2024-yamaha-fz-s-fi

150சிசி சந்தையில் உள்ள இந்தியாவின் பிரபலமாக உள்ள யமஹா FZ சீரிஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள FZ-S FI Ver 4.0 DLX, FZ-S FI Ver 3.0, FZ FI Ver 3.0, மற்றும் FZ-X ஆகியவற்றை விற்பனைக்கு புதிய நிறங்களை மட்டும் பெற்றதாக வந்துள்ளது. ரெட்ரோ ஸ்டைல் பெற்ற FZ-X இரண்டு நிறங்களையும், FZ-S FI Ver 4.0 DLX அடிப்படையில் ரேசிங் ப்ளூ, மேட் பிளாக் & மெஜஸ்டி ரெட் என மூன்று நிறங்களை புதிதாக பெற்றுள்ளது. 2024 Yamaha FZ-S FI Ver 4.0 DLX பொதுவாக FZ வரிசை பைக்குகளில் ஏர் கூல்டு 149cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே…

Read More
hero mavrick 440 spied

வரும் ஜனவரி 23 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மாடலான மேவரிக் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவான X440 பைக்கின் அடிப்படையில் ரோட்ஸ்டெர் மாடலாக மேவரிக் 440 எதிர்பார்க்கப்படுகின்றது. Hero Mavrick 440 ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற அதே என்ஜினை ஹீரோ மேவரிக் பைக் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால் 440cc ஏர் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கின்றது. சேஸ் உள்ளிட்ட அடிப்படையான பல்வேறு அம்சங்களை எக்ஸ்440 பைக்கில் இருந்து பெறப்பட்டு ஹீரோவின் புதிய மாடலின் வடிவமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக்…

Read More
renault kiger 2024

காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மேம்பட்ட வசதிகளை பெற்ற 2024 கிகர் எஸ்யூவி மாடலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை நிர்ணயம் செய்யபட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான சோனெட், வெனியூ, நெக்ஸான், மேக்னைட் மற்றும் மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களை கிகர் எதிர்கொள்ளுகின்றது. 2024 Renault Kiger இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனை பெறுகின்ற கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும்…

Read More
renault triber 2024

இந்தியாவில் கிடைக்கின்ற மிக குறைந்த விலை பெற்ற 7 இருக்கை கொண்ட எம்பிவி ரக ரெனால்ட் ட்ரைபர் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ரூ.5.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான ரெனோ ட்ரைபர், க்விட் மற்றும் கிகர் எஸ்யூவி மாடல்கள் விற்பனைக்கு கூடுதல் வசதிகள் மற்றும் நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2024 Renault Triber 7 இருக்கை பெற்ற ட்ரைபர் எம்பிவி காரில் கூடுதலாக 19க்கு மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாகவும், ஸ்டெல்த் கருப்பு நிறத்தை கொண்டதாகவும் மற்றபடி வசதிகளில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை. 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 hp பவர் மற்றும் 96 Nm டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்கின்றது. டிரைவர் இருக்கை ஆர்ம்ரெஸ்ட்,  ORVM, 7-இன்ச்…

Read More