பரவலாக டீசல் என்ஜின்களை தவிர்க்க துவங்கியுள்ள ஆட்டோமொபைல் உலகில் முதன்முறையாக வால்வோ கார் தனது மாடல்களில் டீசல் என்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஸ்வீடனில் உள்ள டோர்ஸ்லாண்டா ஆலையில் இறுதியாக தயாரிக்கப்பட்டுள்ள டீசல் என்ஜின் பெற்ற XC90 எஸ்யூவி உற்பத்தி முடிவுக்கு வந்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் வால்வோ தனது கார்களை மின்சார வாகனங்களாக மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ XC90 எஸ்யூவி மாடல் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் சமீபத்தில் EX90 என எலக்ட்ரிக் மாடலாக மாறியது. டீசல் என்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தினாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடல்களை தொடர்ந்து தயாரிக்க உள்ளது. மேலும் டீசல் எஞ்சினுக்கு தொடர்ந்து உதிரிபாகங்கள் வழங்குவதனையும், சேவை தொடர்பான அனைத்தையும் சர்வதேச அளவில் வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வால்வோ கார் நிர்வாகி எரிக் செவரின்சன்…
Author: நிவின் கார்த்தி
சிட்ரோன் இந்தியா வெளியிட உள்ள பாசால்ட் (Basalt) விஷன் கூபே ஸ்டைல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. C-cubed திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாசால்ட் கூபே காரின் எஞ்சின் மற்றும் இண்டிரியரில் உள்ள வசதிகள் தொடர்பான விபரங்களை தற்பொழுது அறிவிக்கவில்லை. பாசால்ட் டிசைன்: கூபே ரக ஸ்டைலை பெற்றுள்ள இந்த காரின் முன்பக்க தோற்ற அமைப்பு விற்பனையில் உள்ள C3 ஏர்கிராஸ் காரை போலவே அமைந்திருக்கின்றது. விலை அறிவிப்பு : விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பாசால்ட்டின் விலை ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம். Citroen Basalt எஞ்சின் தொடர்பான விபரங்களை தற்பொழுது அறிவிக்கவில்லை என்றால் இந்தியாவில் கிடைக்கின்ற மற்ற மாடல்களில் உள்ள 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக்…
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள N250, F250 என இரு பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக பல்சர் வரிசை பைக்குகளில் என்எஸ், என் வரிசைகள் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுடன் வந்துள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள 2024 பஜாஜ் பல்சர் என் 250, எஃப் 250 மோட்டார்சைக்கிளில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் விபரம் பின்வருமாறு;- பல்சர் 250 டிசைன்: அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் புதிய பாடி கிராபிக்ஸ் சேர்க்ககப்பட்டிருக்கலாம். யூஎஸ்டி ஃபோர்க்: புதிதாக வரவுள்ள மாடல் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆக அப்சைடு டவுன் ஃபோர்க் பெற உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டர்: சமீபத்தில் வெளியான பல்சர் பைக்குகளில் இடம்பெற்ற ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும். 2024 Bajaj Pulsar N250, F250 இரு பைக்…
இந்தியாவில் சிட்ரோன் வெளியாட உள்ள கூபே ஸ்டைல் பெற்ற எஸ்யூவி மாடலுக்கு பாசால்ட் என பெயரிடப்பட்டு மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. முன்பாக C3X என அறியப்பட்டு வருகின்ற இந்த மாடல் சி3 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கும். தற்பொழுது வரை சிட்ரோன் பாசால்ட் விஷன் கூபே ரக எஸ்யூவி மாடல் பற்றி வெளிவந்துள்ள விபரத்தை அறிந்து கொள்ளலாம். கூபே ஸ்டைல்: நாட்ச்பேக் மாடல்களுக்கு இணையான வடிவமைப்பினை பெற்று அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் உறுதியான கட்டுமானத்தை கொண்டிருக்கும். எஞ்சின் விபரம்: தற்பொழுது இந்திய சந்தையில் வழங்கப்பட்டு வருகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெற உள்ளது. எலக்டரிக் பாசால்ட் : அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு எலக்ட்ரிக் காராகவும் இந்திய சந்தையில் கிடைக்க உள்ளது. Citroen Basalt Coupe SUV இந்திய சந்தைக்கு வரவுள்ள பாசால்டின்…
ஹோண்டா நவீனத்துவமான ரெட்ரோ டிசைனை கொடுத்து தயாரித்துள்ள ஸ்டைலோ 160 ஸ்கூட்டருக்கான டிசைனுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்றுள்ளதால் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தருகின்ற Stylo 160 ஸ்கூட்டரில் 156.9 cc, லிக்யூடு கூல்டு 4 வால்வுகளை பெற்ற eSP+ எஞ்சின் அதிகபட்சமாக 15.4 PS பவர் மற்றும் 13.8 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. Honda Stylo 160 மாடர்ன் கிளாசிக் டிசைன் என அறியப்படுகின்ற ஸ்டைலோ 160 ஸ்கூட்டரில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பெற்றதாகவும் மிக நேர்த்தியான அப்பரானை வளைவுகளுடன் பெற்றதாக அமைந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டர், கீ லெஸ் இக்னிஷன், அகலமான ஃபுளோர் போர்ட் மற்றும் பிரவுன் நிறத்திலான இருக்கைகளை பெற்று பச்சை, சிவப்பு, கருப்பு, பீஜ் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை பெற்றுள்ளது. மேலும் இந்த மாடல் eSAF (enhanced Smart…
மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்த பலேனோ மற்றும் வேகன் ஆர் காரிகளில் எரிபொருள் மோட்டார் பம்பில் சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதனை நீக்க தானாக முன்வந்து இலவசமாக மாற்றித் தர உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 30, 2019, முதல் நவம்பர் 1, 2019 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இடம்பெற்றுள்ள ஃப்யூவல் மோட்டார் பம்பில் (Fuel Pump Motor component) உள்ள பிரசன்னையின் காரணமாக வாகனம் ஸ்டார்ட் செய்யும் பொழுது சிரமங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பலேனோவின் 11,851 யூனிட்கள் மற்றும் வேகன் ஆர் மாடலின் 4,190 யூனிட்கள் என ஒட்டுமொத்தமாக 16,041 யூனிட்டுகளை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. பாதிப்படைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இலவசமாக மாற்றி தர டீலர்கள் மூலம் அழைப்புகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிசான் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தை துவங்கியுள்ளதால் அடுத்த 4 முதல் 8 மாதங்களுக்குள் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மேக்னைட் மேம்படுத்துவதனால் கிகர் எஸ்யூவி மாடலை மேம்படுத்தி விற்பனைக்கு ரெனால்ட் வெளியிட உள்ளது. இரு மாடல்களும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளுகின்றன. 2024 Nissan Magnite ஒட்டுமொத்த அடிப்படையான கட்டுமானத்தில் பெரிதாக மாற்றமில்லாமல் சில பாதுகாப்பு மேம்பாடுகளுடன் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் முழுமையாக மறைக்கப்பட்டுள்ள நிலையில் தோற்ற அமைப்பில் முன்பக்க பம்பர் கிரிலில் பெரிய மாற்றங்கள் இருப்பதுடன் அலாய் வீல் மற்றும் பின்புற பம்பர் டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து, 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை…
4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் வரவிருக்கும் ஸ்கோடா மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது. MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள காரில் மிகவும் நவீனத்துவமான வசதிகளுடன், பாதுகாப்பான கட்டுமானத்தை கொண்டிருக்கும். ஸ்கோடாவின் பாரம்பரிய கிரிலுடன் அமைந்துள்ள காரின் முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட் செட்டப் உடன் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், உயரமான வீல் ஆர்ச் பெற்றிருக்கின்றது. 2,566 மிமீ வீல்பேஸ் கொண்டதாக அமைந்துள்ள மாடலில் 115hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 170 Nm டார்க் பெற வாய்ப்புள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கூடுதலாக 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் எனது பெறலாம். இந்த மாடலுக்கான…
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ள உலகின் முதல் ப்ரூஸர் (Bruzer CNG) சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ள சிஎன்ஜி ப்ரூஸர் 115சிசி முதல் 150சிசி வரை வரக்கூடும் அல்லது 102சிசி முதல் 125சிசி வரை உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துவக்க நிலை தினசரி பயன்பாடிற்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள மோட்டார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளுக்கான டேங்கை மிக நேர்த்தியாக இருக்கைக்கு மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு அடிப்பகுதியில் பொருத்தியிருக்கின்றது. எனவே, எவ்விதமான இடவசதி பாதிப்புகளும் இல்லாமலும், மிகவும் அடக்கமாகவும் வடிவமைத்துள்ளதால் பெரிதாக தோற்ற அமைப்பில் வித்தியாசப்படுவதற்கு வாய்ப்பில்லை. சிஎன்ஜி எரிபொருள் டேங்கின் கொள்ளளவு பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. சோதனை ஓட்டத்தில் உள்ள சிஎன்ஜி மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.…