ICRA வெளியிட்டுள்ள புதிய Electric Mobility Promotion Scheme 2024 விதிகளின் படி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விலை 10 % வரை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற FAME 2 மானியம் மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைகின்றது. எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் மானியம் குறைக்கப்பட்ட பொழுது ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டது தற்பொழுது இந்தியாவின் கடன் மதிப்பீட்டு மையம் (Investment Information and Credit Rating Agency of India Limited) தயாரித்து இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி ப்ரோமோஷன் திட்டம் 2024 (EPMS) ஆனது, ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை நான்கு மாதங்களுக்கு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மொத்தம் ரூ 500 கோடியை ஒதுக்கியுள்ளது.…
Author: BHP Raja
இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மின்சார கார்களுக்கு 15 % வரை வரி சலுகை குறிப்பட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதி வழங்கி இந்திய அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் டெஸ்லா, வின்ஃபாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையும் மேலும் ஃபோர்டு இந்தியா புதிய முதலீடு திட்டங்களை அறிவிக்கும் பட்சத்தில் இந்நிறுவனமும் பயன் பெறலாம். முக்கிய நிபந்தனைகள் உள்ளூர் உற்பத்தி திறனை அதிகரிக்க அடுத்த 3 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச தொகையாக ரூ.4,150 கோடி அல்லது 500 மில்லியன் டாலருக்கான முதலீடு திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும். அதிகபட்ச முதலீடு தொடர்பான வரம்பு இல்லை. 3 வருடத்துக்குள் உற்பத்தியாளர் இந்தியாவில் தொழினற்சாலையை நிறுவினால், செலவு, காப்பீடு மற்றும் சரக்கு (CIF) மதிப்பு USD 35,000 (ரூ. 29 லட்சத்திற்கு மேல்) உள்ள வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சுங்க வரியாக (CKD களுக்கு பொருந்தும்) 15 சதவீதம் விதிக்கப்படும். ஆனால்…
கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவன யெஸ்டி பிராண்டில் புதிய ரோட்ஸ்டெர் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் நடைபெற்ற ஜாவா யெஸ்டி டீலர் நிகழ்வின் மூலம் இணையத்தில் கசிந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெற்றுள்ள 334cc லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு ஒற்றை எக்ஸ்ஹாஸ்ட் கொண்டதாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் வெளியான ஜாவா 350 பைக்கில் உள்ளதை போல பவர் சற்று குறைவாக இருக்கலாம். வட்ட வடிவ ஹெட்லைட் யூனிட் பெற்று மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்கில் யெஸ்டி அட்வென்ச்சரில் உள்ளதை போன்ற கிராபிக்ஸ் உடன் கூடிய லோகோ பெற்றதாகவும், பக்கவாட்டில் உள்ள பாக்ஸ் பேனலிலும் யெஸ்டி Y லோகோ இடம்பெற்றுள்ளது. இரு பிரிவுகளை கொண்ட அனலாக் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சிறிய டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இடம்பெற்றுள்ளது. மற்றபடி, ஒற்றை ஃபிளாட் இருக்கையுடன் மிக அகலமான டயரை பெற்றதாகவும் அமைந்துள்ள இந்த மாடலின் இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்…
400 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ள ஸ்கோடா எபிக் (Epiq BEV) எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை ஐரோப்பா சந்தையில் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது. மாசு உமிழ்வு இல்லா 6 மாடல்களை 2026க்குள் வெளியிட ஸ்கோடாவின் பட்டியிலில் ஒன்றாக எபிக்கும் விளங்க உள்ளது. 4100 மிமீ நீளம் கொண்டுள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் ஆனது BEV மாடலாக விற்பனைக்கு வரும் பொழுது 2600 மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகின்ற இந்த மாடல் 38kWh மற்றும் 56kWh என இரு விதமான பேட்டரி பேக் பெற்றிருக்கலாம் என கூறப்படும் நிலையில் எவ்விதமான நுட்பவிபரங்களும் தற்பொழுது ஸ்கோடா வெளியிடவில்லை. எபிக் இண்டிரியர் எபிக் காரின் இண்டிரியரில் குறைவான கோடுகளுடன் எளிமையான நவீனத்துவமான டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் மத்தியில் ஃபுளோட்டிங் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருக்கும். 5 இருக்கை கொண்ட கேபினில் மிக நேர்த்தியான…
வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி மாருதி சுசூகியின் ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ரக மாடலின் அடிப்படையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற பலேனோ அடிப்படையிலான க்ராஸ்ஓவர் ரக ஃபிரான்க்ஸ் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று விற்பனைக்கு வந்த 10 மாதங்களுக்குள் 1 லட்சம் இலக்கை கடந்து சாதனை படைத்திருந்தது. டொயோட்டா டைசர் காரில் இரு விதமான எஞ்சின் பெறுவது உறுதியாகியுள்ளது. அவற்றின் விபரம் பின் வருமாறு;- 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனில் வரக்கூடும். டாப் வேரியண்டில் சக்திவாய்ந்த 100 hp பவர்,…
இந்தியாவின் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற எஸ்யூவிகளில் பிரபலமாக உள்ள டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட டிசைன் கொண்ட 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற பஞ்ச் இவி காரின் அடிப்படையிலான டிசைன் உந்துதலை தழுவியதாக எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பஞ்சில் முன்பக்க கிரில் மற்றும் பம்பர் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம். புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் பார் லைட் முன்பக்கம் வழங்கப்படுவதுடன், பக்கவாட்டில் புதிய அலாய் வீல் மட்டும் பெற்று கதவுகள் மற்றும் பின்புற சி பில்லர் பகுதியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் தற்பொழுதுள்ள அதே எல்இடி டெயில் லைட்டுகளை கொண்டிருக்கின்றது. இன்டிரியர் தொடர்பான படங்கள் தற்பொழுது கிடைக்கவில்லை என்றாலும், சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்ற டேஸ்போர்டில் ஸ்டைலிங் மாற்றங்களுடன் நிறங்கள் வேறுபடுத்த வாய்ப்புள்ளது. மேலும்…
இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி ஆக உருவெடுத்துள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஆம் ஆண்டிற்கான தேதி ஜனவரி 17 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடைபெற உள்ள கண்காட்சி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் (புது டெல்லி), யஷோபூமி இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டர் (துவாரகா, டெல்லி NCR) மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட் (கிரேட்டர் நொய்டா) ஆகிய மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் புதிய வாகனங்கள் உட்பட பல்வேறு மேம்பட்ட வாகனங்கள், ஆட்டோமொபைல் நுட்பங்கள், எதிர்கால எலெக்ட்ரிக் வாகன நுட்பங்கள் என அனைத்தும் ஒரே குடையின் கீழ் இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு வரை நடைபெற்று வந்த ஆட்டோ…
சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலை பஜாஜ் ஆட்டோ தயாரித்து வரும் நிலையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள படம் மீண்டும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ தலைவர் ராஜீவ் பஜாஜ் அளித்த பேட்டியில் சி.என்.ஜி பைக் மாடல் நடப்பு 2024 ஆண்டில் அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே வெளியிட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். பஜாஜ் சிஎன்ஜி பைக் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள சிஎன்ஜி எரிபொருளுக்கான டேங்கை மிக நேர்த்தியாக இருக்கைக்கு மற்றும் பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதியில் பொருத்தியிருக்கின்றது. மேலும் மிக நீளமான இருக்கை அமைப்பும் உள்ளதால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. உற்பத்தி நிலை மாடல் அனேகமாக பிளாட்டினா 110 பைக்கினை போல அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருத்தப்பட்ட உள்ள பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு பற்றி எந்த தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை. இந்த மாடல் பெட்ரோலில் முழுமையாகவும் அதே போலவே சிஎன்ஜி பயன்முறை…
இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ள நிலையில் எண்டேவர் எஸ்யூவி பற்றி முக்கிய விபரங்களை தொகுத்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். பல்வேறு நாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் எண்டேவர் எஸ்யூவி என விற்பனை செய்யப்பட்ட மாடல் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலை ஃபோர்டு இந்தியாவின் சென்னை தொழிற்சாலை விற்பனை முடிவை கைவிட்ட நிலையில் எண்டோவர் உட்பட பல்வேறு டிசைன் அம்சங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. Ford Endeavour or Everest சர்வதேச அளவில் 2.0 லிட்டர் டர்போ டீசல், 2.0 லிட்டர் பை டர்போ டீசல் மற்றும் 3.0 லிட்டர் V6 டர்போ டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் அல்லது 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்று 4×2 மற்றும் 4×4 என இரு விதமான ஆப்ஷனிலும்…