இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா (Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 பிளஸ் மற்றும் V1 புரோ என இரு மாடல்களின் 2024 ஆம் ஆண்டிற்கான பேட்டரி, ரேஞ்ச், சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்வோம். எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் வீடா வி1 பிளஸ் மற்றும் வீடா வி1 புரோ என இரு மாடல்களின் சிறப்புகள் பொதுவாக ஒரே மாதிரியாக அமைந்துள்ளன சிறிய வித்தியாசங்களும் பின் வருமாறு;- Vida V1 Plus & V1 Pro சமீபத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வீடா வி1 பிளஸ் மற்றும் வீடா வி1 ப்ரோ என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நீக்கும் வகையிலான பேட்டரி பொருத்தப்பட்டு மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்றிருப்பதனால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவருகின்றது. குறிப்பாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆரஞ்ச், சிவப்பு, நீலம்,…
Author: BHP Raja
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மாடல்களின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் வடிவமைப்பினை ஏற்படுத்தி 450 சீரியஸ் மாடலானது அமோக வரவேற்பினை சந்தையில் பெற்று நாட்டின் மூன்றாவது பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. தற்பொழுது புதிதாக வந்துள்ள ஏத்தர் Rizta ஸ்கூட்டர் ஆனது ஃபேமிலி ஸ்டைல் லுக்கில் மிக நேர்த்தியாக அமைந்து பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய ஒரு பிளஸ் ஆக அமைந்திருக்கின்றது. 450 சீரிஸ் மாடல் பொறுத்தவரை தற்பொழுது 450X, 450S மற்றும் 450 அபெக்ஸ் சிறப்பு எடிசன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனில் கிடைக்கின்ற நிலையில் புதிதாக வந்துள்ள ரிஸ்டா…
ஏதெர் எனர்ஜி வெளியிட்டுள்ள புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கை, சிறப்பான பேட்டரி, ரேஞ்சு விலை உட்பட பல்வேறு அம்சங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம். Ather Rizta E scooter ‘family scooter’ என்ற நோக்கத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஏதெர் ரிஸ்டாவில் மிக நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ள அப்ரானில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இரு பக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்றிருக்கின்றது. பாடி பேனல்கள் சற்று அகலாமாக கொடுக்கப்பட்டு முன்புற ஃபுளோர் போர்ட் தாராளமாக சிறிய அளவிலான சுமைகளை வைக்க ஏதுவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இரண்டு பெரியவர்கள் மிக தாராளமாக அமர்ந்து செல்ல ஏதுவாக அகலமான இருக்கையுடன் பெரிய பேக் ரெஸ்ட் உடன் பயணிப்பவருக்கு வழங்கியுள்ளது. இருக்கையை இலகுவாக திறக்க ஏதுவாக ஸ்லாட்டும் உள்ளது. ரிஸ்தா ஸ்கூட்டரின் இருக்கையின் அடிப்பகுதியில் இடவசதி 34 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில்…
FAME-II மானியம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய EMPS 2024 (Electric Mobility Promotion Scheme) மானியத்தின் கீழ் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. புதிய எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 கீழ் ஏப்ரல் முதல் 31 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்துக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் அதிகபட்சமாக ரூ.10,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று சக்கர எலக்ட்ரிக் ரிக்ஷா மற்றும் இ-கார்ட் வாகனங்களுக்கும் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக இருந்த மானியம் ரூ. 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது, எனவே, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே பலன் கிடைக்கும். இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஏதெர் எனர்ஜி நிறுவன 3.7kwh பேட்டரி…
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏதெர் எனர்ஜி நடத்த உள்ள ரிஸ்டா அறிமுக விழாவில் புதுப்பிக்கப்பட்ட 450 சீரிஸ் உட்பட புதிய எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இ-பைக் கான்செப்ட் அறிமுகத்தை ஏறக்குறைய உறுதி செய்துள்ள நிலையில் விற்பனைக்கு முதல் மாடல் அடுத்த 3-5 ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம். Ather Electric Motorcycle ஃபேமிலி ரிஸ்டா ஸ்கூட்டரை பற்றி தொடர்ந்து பல்வேறு டீசர்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டத்தில் பல்வேறு எதிர்கால திட்டங்கள் உட்பட கூடுதலாக புதிய மின்சார மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டுகளை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. 2027 ஆம் ஆண்டு இந்நிறுவனம் வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் பைக் அனேகமாக 150சிசி பெட்ரோல் மாடல்களுக்கு இணையான செயல்திறன் மற்றும் நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் டிசைன் வடிவமைப்பினை கொண்டிருக்கலாம். இந்தியாவின் எலக்ட்ரிக் பைக் சந்தையில்…
உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக இந்நிறுவன தலைவர் ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக சி.என்.ஜி பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியான நிலையில் தற்பொழுது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. Bajaj CNG பெட்ரோல் பைக்குகளை விட கூடுதல் மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுகின்ற சிஎன்ஜி எரிபொருள் பெட்ரோலை விட விலை மலிவானதாக கிடைப்பதனால் மிகப்பெரிய மாற்றத்தை இந்த மோட்டார்சைக்கிள் தரும் என பஜாஜ் நம்புகின்றது. 100 சிசி சிஎன்ஜி பைக் என ஆரம்பத்தில் கூறப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது கிடைத்த சில தகவல்களின் படி 100-150சிசி வரையில் உள்ள பிரிவுகளில் மாறுபட்ட செயல்திறன் மற்றும் ஸ்டைல்களை கொண்டதாக அமைந்திருக்கலாம். சமீபத்தில் வெளியான சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட மாடல் ஒன்று எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.…
ஏப்ரல் 6 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பாக வெளியிட்ட புதிய டீசர் மூலம் நீரில் பயணிக்கும் திறன் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 40 அடி உயரத்திலிருந்து பேட்டரி தூக்கி எறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசர் வெளியான நிலையில், தற்பொழுது 400 மிமீ நீர் நிரம்பிய இடத்தில் ஸ்கூட்டரை இயக்கி சோதனை ஓட்டத்தை ஈடுத்திய வீடியோ வெளியிட்டுள்ளது. மிக அகலமான இருக்கை குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் ரிஸ்டாவில் IP67 பேட்டரி ஆதரவினை பெற்றதாக அமைந்துள்ளது. 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். இந்த பேட்டரிகள் ஏற்கனவே விற்பனையில் உள்ள 450 சீரிஸ் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன. 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150-160 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111-125 கிமீ…
இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடலாம். க்ரெட்டா இவி காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற மாடல் 400 கிமீ முதல் 600 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் க்ரெட்டா என்-லைன் மற்றும் க்ரெட்டா என இரு மாடல்களும் விற்பனையில் கிடைக்கின்ற நிலையில் புதிதாக வரவுள்ள க்ரெட்டா இவி காரின் தோற்ற அமைப்பில் ஒரே மாதிரியான எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றாலும் மாறுபட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பர் பெற்றதாக அமைந்திருக்கலாம். இந்திய சந்தையில் கிடைக்கின்ற டாடா நெக்ஸான்.ev, மஹிந்திரா XUV400, எம்ஜி ZS EV, வரவுள்ள மாருதி சுசூகி…
இந்திய சந்தையில் லெக்சஸ் வெளியிட்ட பிரீமியம் எம்பிவி மாடலாக LM 350h ஆனது 4 மற்றும் 7 இருக்கை என இரு விதமான வேரியண்டில் உயர்தரமான பாதுகாப்பு கட்டுமானத்துடன் ஆடம்பர சொகுசு கப்பலை போன்ற வசதிகளை பெற்றதாக உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற டொயோட்டாவின் வெல்ஃபயர் எம்பிவி மாடலின் GA-K பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள லெக்சஸ் LM 350h காரின் நீளம் 5,130 மிமீ, 1,890 மிமீ அகலம் மற்றும் 1,945 மிமீ உயரம் கொண்டுள்ளது. ரூ.2 கோடியில் 7 இருக்கை மற்றும் லான்ஞ் பேக்கேஜ் பெற்ற 4 இருக்கை வேரியண்ட் ரூ.2.50 கோடியாகவும் உள்ளது. லெக்ஸஸ் எல்எம் 350 எச் காரில் உள்ள 2.5-லிட்டர், 4-சிலிண்டர் சுயமாக சார்ஜிங் செய்து கொள்ளுகின்ற ஹைப்ரிட் எஞ்சின் பெற்று 250hp மற்றும் 239Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 இருக்கை கொண்ட வேரியண்டில் இரு பிரிவாக பிரிக்கப்பட்ட பின்புறத்தில் உள்ள…