மிக நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் தற்பொழுது டிவிஎஸ் ஐக்யூப் ST மாடல் இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ரேஞ்ச், பேட்டரி, ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விதமான முழுமையான விபரங்களையும் தற்போது அறிந்து கொள்ளலாம். முதல்முறையாக ஐக்யூப் விற்பனைக்கு வெளியிடும் பொழுது இந்த மாடலானது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது விலை கூடுதலாகவும் பல்வேறு காரணங்களாலும் இந்நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்யவில்லை. தற்பொழுது தான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்ற நிலையில் 5.1 கிலோவாட்ஹவர் மிக அதிகப்படியான பேட்டரியை கொண்டிருக்கின்றது .மேலும் அதிகப்படியாக ரேஞ்ச் 150 கிலோமீட்டர் உண்மையான பயணிக்கும் ரேன்ஜ் வழங்கும் என டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் 3.4kwh மற்றும் 5.1kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனில் மிக முக்கியமான பேட்டரி வித்தியாசம் தவிர டாப் ஐக்யூப் 5.1 ST வேரியண்டில் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ, ரேஞ்ச் 150…
Author: BHP Raja
ஆம்பியர் நிறுவனத்தின் ரியோ Li பிளஸ் மற்றும் மேக்னஸ் என இரு மாடல்களின் விலையை ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் மிகவும் சிறப்பான டிசைன் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்ற நெக்சஸ் என்ற ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ள ஆம்பியர் ரியோ Li பிளஸ் மாடலில் வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லாத இந்த ஸ்கூட்டரில் 1.3kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 70 கிமீ பயணிக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேக்னஸ் EX வேரியண்ட் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன் முழுமையான சார்ஜில் 100 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து, ரூ.9,000 வரை விலை குறைந்துள்ள மேக்னஸ் LT மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன் முழுமையான சார்ஜில் 80 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Ampere Escooter Price…
டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்டின் விலை ரூ.1.08 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றது. இந்த மாடலை தவிர இந்நிறுவனம் 3.4kwh மற்றும் 5.1kwh என இரு வித பேட்டரி ஆப்ஷனை ஐக்யூபில் வழங்குகின்றது. மிக நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள ஓலா S1X, ஏதெர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களுடன் வரவிருக்கும் சேட்டக் என பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. TVS iQube 2.2kwh Escooter பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான வசதிகளை டிவிஎஸ் மோட்டார் வழங்குகின்றது. குறிப்பாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாகவும் விளங்குகின்றது. ஆரம்ப நிலை டிவிஎஸ் ஐக்யூப் 2.2kwh லித்தியம் ஐயன் பேட்டரி பெற்று 950W சார்ஜரை கொண்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 0-80% பெற 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஈக்கோ மற்றும் பவர் என விதமான ரைடிங்…
புதிய 84kwh பேட்டரி பெறுகின்ற 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை வெளிப்புறத்தில் பெற்று இருப்பதுடன் இன்டிரியரிலும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. மேலும், EV6 GT பற்றி எந்த விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. முன்புறத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பம்பருடன் புதுப்பிக்கப்பட்ட புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பாக இடம் பெற்று இருந்த ஹெட்லைட் ஆனது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் மற்றும் ஏர் இன்டேக் போன்றவை எல்லாம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பக்கவாட்டு தோற்றம் அமைப்பில் எந்த ஒரு மாற்றங்களும் இல்லாமல் புதிய பிரிக்கப்பட்ட அளவில் மட்டும் பெற்றிருக்கின்றது மற்றபடி புதிய டெயில் லேம்ப் மற்றும் பம்பர் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் தற்பொழுது இடம் பெற்று இருப்பதை போன்று மிகவும் அகலமான பனேராமிக் ஸ்கிரீனுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் இன்போடையின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்டீயரிங் வீலில் கூடுதலாக…
குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் வழங்குகின்ற போட்டியாளர்களை விட அதிக விலையில் வசதிகள் மற்றும் ரேஞ்ச் வழங்குகின்ற டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எந்த மாடல் சிறப்பானது என்பதை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது பார்க்கப் போகின்றோம். இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூபிற்கு போட்டியாக ஏதெர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ், பஜாஜ் சேட்டக், ஓலா S1X, S1 ஏர், மற்றும் S1 pro, ஹீரோ வீடா உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு சிறிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் உள்ளனர். மேலும் படிக்க – குடும்பத்திற்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப் ரேஞ்ச் Vs போட்டியாளர்கள் தயாரிப்பாளர் பேட்டரி, ரேஞ்ச், சார்ஜிங், டாப் ஸ்பீடு TVS iqube 2.2kwh பேட்டரி – 2.2 Kwh, IDC ரேஞ்ச் – 75km/charge , உண்மையான ரேஞ்ச் – 65-70 km, அதிகட்ச வேகம் – 75km/hr சார்ஜிங் நேரம் (0-80%) – 2 hrs…
ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நடப்பு 2024-2025 ஆம் நிதியாண்டில் வருவதற்கு சாத்தியமில்லை என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறித்து உறுதியான காலக்கெடுவை தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு குழு பிரத்தியேகமாக எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் இருச்சகர வாகனங்களை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஸ்டார்க் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மின்சார வாகன வணிகத்தை உருவாக்க தனியான பிரத்யேக வணிகக் குழுவை உருவாக்கி வருகிறது. சித்தார்த்த லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் வலுவான வணிகக் குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பது, இதற்கான பேட்டரி, நுட்பங்களை இலகுவான எடை மற்றும் குறைந்த விலையில் கொண்டு வரும் முயற்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஸ்கூட்டர்களை போல முக்கிய இடத்தை பெறுவதற்கு மோட்டார்சைக்கிள்கள் நீண்ட காலத்தை எடுத்துக்…
டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரூபாய் 1.08 லட்சம் முதல் ரூபாய் 1.86 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக 2.2kwh பேட்டரி, முந்தைய 3.4kwh பேட்டரி மற்றும் டாப் ST வேரியண்டில் 5.1 kwh பேட்டரி என மூன்று விதமான ஆப்ஷனில் ஐக்யூப் 09, ஐக்யூப் 12, ஐக்யூப் S, ஐக்யூப் ST 12, மற்றும் ஐக்யூப் ST 17 என 5 விதமான வேரியண்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு பொதுவாக 950W சார்ஜர் வழங்கப்படுகின்றது. 2.2kwh பேட்டரி பெறுகின்ற துவக்க நிலை ஐக்யூப் 09 வேரியண்டில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 75 கிமீ பயணிக்கலாம். இதன் சார்ஜிங் நேரம் 0- 80 % பெற 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 3.4kwh பேட்டரியை பெறுகின்ற ஐக்யூப் 12, ஐக்யூப் S, மற்றும் ஐக்யூப்…
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குறைந்த விலை மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்ட S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. ரூ.70,000 விலையில் துவங்குகின்ற S1X 2Kwh பேட்டரி உள்ள இ-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்று மலிவு விலையில் 95km ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் உண்மையான வரம்பு 70 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது. ரூ.85,000 விலையில் கிடைக்கின்ற 3kwh பேட்டரி பேக் கொண்ட எஸ்1 எக்ஸ் வேரியண்ட் அதிகபட்சமாக 143 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றளிக்கப்பட்டு நிகழ்நேரத்தில் 100-110 கிமீ வழங்கலாம். ரூ.99,999 விலையில் டாப் 4kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 150 கிமீ வழங்கலாம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட…
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரை தினசரி பயன்பாட்டிற்கு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சிறந்த அனுபவம் தருகின்ற பயணம் மற்றும் அதிகப்படியான சுமைகளை எடுத்துச் செல்ல மற்றும் இட வசதி சார்ந்த அம்சங்களை பெறுவதற்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை எல்லாம் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் ரிஸ்ட்டா, பஜாஜ் சேட்டக், ஓலா எஸ் ஒன் எக்ஸ், மற்றும் ஆம்பியர் நெக்ஸஸ் ஆகியவை உள்ளடக்கிய சிறப்பு ஒப்பிட்டு பார்வையாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாடல்களில் சிறந்த மாடல்களில் இங்கே வகைப்படுத்தி உள்ளோம். இவற்றில் உங்களுக்கான விருப்பம் இது என்பதை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட் பொதுவாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்களை விட 60 % முதல் 70% வரை கூடுதலான விலையில் தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சிறப்பான…