Author: BHP Raja

நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

vida v1 pro

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வீடா எலக்ட்ரிக் பிராண்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள V1 இ-ஸ்கூட்டரை விட மிக குறைந்த விலையில் ஒரு மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். மேலும் மற்றொரு மாடல் பிரீமியம் வசதிகளை கொண்டதாக வி1 மாடலை விட கூடுதலான வசதிகள் பிரீமியம் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ளது. தற்பொழுது சந்தையில் உள்ள வி1 பிளஸ் மற்றும் வி1 புரோ மாடல்கள் விலை ரூ. 1.20 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கிடைத்து வருகின்றது. 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

Read More
kia ev3 suv

கியா வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி EV3 காரில் 81.4kWh மற்றும் 58.3kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பதுடன் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவிகளை வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் முதன்முறையாக ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ள EV3 இ-எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது. Kia EV3 மிக சிறப்பான பாக்ஸ் ஸ்டைல் டிசைனை பெற்றுள்ள இவி3 எலக்ட்ரிக் காரில் தற்பொழுது கியா கார்களில் இடம்பெறுகின்ற ‘star map’ எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று மிக நேர்த்தியான கோடுகளை பெற்று இந்நிறுவனத்தின் பாரம்பரியமான ‘tiger nose’ கிரில் கொண்டதாக அமைந்துள்ளது. 4,300mm நீளம், 1,850mm அகலம், 1,560mm உயரம் பெற்றுள்ள காரின் அளவுகள் கியா செல்டோஸ் மாடலுக்கு இணையாக பெற்றுள்ள நிலையில் 2,680mm வீல்பேஸ்…

Read More
டிவிஎஸ் ஐக்யூப் ST colour

டிவிஎஸ் மோட்டாரின் பிரசித்தி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் மாடலை இத்தாலி, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்தாலியில் சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையை துவங்கிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப், X  மட்டுமல்லாமல் என்டார்க் உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2.2kwh, 3.4kwh மற்றும் 5.1kwh என மூன்று விதமான பேட்டரி பெற்றதாக 5 விதமான வேரியண்ட் அமைந்துள்ளது. 75 கிமீ முதல் 150 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது. இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள iQube விலை LKR 10,99,760 (ரூ. 304,933) விலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள TVS லங்கா டீலர்ஷிப்களில் டெஸ்ட் டிரைவ் மற்றும் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இலங்கை முழுதும் கிடைக்க உள்ள டிவிஎஸ் iQube ஐ வாங்குபவர்களுக்கு டவுன் பேமென்ட்…

Read More
tvs iqube vs Ather rizta escooter

இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களின் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏதெர் ரிஸ்டா என இரண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் இ-ஸ்கூட்டரின் வசதிகளை பெற்றதாக வெளியிடப்பட்டு இரு மாடல்களுக்கான ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் என மூன்று வித பேட்டரியை பெற்று ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை கிடைக்கின்றது. ரிஸ்டா ஸ்கூட்டரில் இரண்டு வித பேட்டரியை பெற்ற 3 விதமான வேரியண்ட் உள்ளது. Ather Rizta S,Z Ather Rizta Z TVS iQube 2.2kwh TVS iQube 3.4 kwh /S/ST TVS iQube ST 5.1kwh மோட்டார் வகை PMSM PMSM BLDC BLDC BLDC பேட்டரி 2.9Kwh 3.7kwh 2.2kwh 3.4kwh 5.1 kwh பவர் 4.3kW 4.3kW 3kw 3kw 3kw டார்க் 22 NM 22…

Read More
byd shark

மெக்சிக்கோ சந்தையில் வெளியிடப்பட்டுள்ள BYD நிறுவனத்தின் முதல் பிக்கப் டிரக ஷார்க் PHEV அதிகபட்சமாக 435 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிஓய்டி நிறுவனத்தின் ‘Ocean Series’ வரிசையில் வெளியாகியுள்ள ஷார்க் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள  1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டூ பெட்ரோல் என்ஜின் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷனுடன்  DMO (dual-mode off-road) வசதி கொண்டதாகவும் சிறப்பான ஆஃப் ரோடு அனுவபத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு அதிகபட்சமாக 435hp பவரை வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 100 km/hr வேகத்தை வெறும் 5.7 வினாடிகள் மட்டுமே பிஒய்டி ஷார்க் எட்டுத்துக் கொள்ளுகின்றது. இந்த மாடலில் உள்ள பேட்டரி திறன் மூலம் 100 கிமீ பயணிக்கும் ரேஞ்ச் வெளிப்படுத்தும் நிலையில் இந்த பேட்டரியை 30-80% சார்ஜ் ஏறுவதற்கு 20 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளுகின்றது. 835 கிலோ சுமக்கும் திறன் மற்றும் 2,500…

Read More
sonet suv side view

இந்திய சந்தையில் கியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் என மூன்று மாடல்களை ORIX ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து குத்தகைக்கு (Kia Car Lease) விடும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கியா நிறுவனம் குத்தகை சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி NCR, மும்பை, ஹைதராபாத்,  பெங்களூரு மற்றும் புனே என ஆறு முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. புதிய சேவைய மாதாந்திர கட்டணமாக ரூ. 21,900/- முதல் ரூ. 28,800/-, மாடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற 24 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை வழங்கப்படுகின்றது. இதில் ஏதேனும் ஒரு மாத திட்டத்தை தேர்ந்தெடுப்பதுடன் முன் தொகை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாதாந்திர குத்தகை திட்டத்தில் காப்பீடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதால் கூடுதல் செலவுகளை குறைக்கின்றது. லீசு முடிவில், வாடிக்கையாளர்கள் வாகனத்தைத் திரும்பப் பெறுவதற்கும், குத்தகையைப் புதுப்பிப்பதற்கும் அல்லது புதிய…

Read More
Automotive Research Association of India

புனேவில் உள்ள ARAI அமைப்பு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகளை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI- Automotive Research Association of India) அமைப்பு இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் (MHI) கீழ் செயல்படுகின்றது. குறிப்பாக எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் சோதனைக்கு உட்படுத்ததுவதற்கான முக்கிய காரணமே விபத்தின் பொழுது வாகனங்கள் தீப்பிடிக்கின்றதா என்பது குறித்து அறிந்து கொள்ள சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம். சோதனை செய்யப்பட்டுள்ள வாகனங்கள் குறித்தான விபரத்தை தெரிவிக்கையில், தற்பொழுதுள்ள அளவுகோல்களுக்கு எதிராக சோதனைகள் நடத்தப்பட்டன, ஆக்சிலேரோமீட்டர் மற்றும் அதிவேக கேமராக்களைப் பயன்படுத்தி விரிவான கிராஷ் டெஸ்ட் தரவைப் பதிவுசெய்துள்ளது. சோதனைகளில் ஒரு நிலையான தடுப்பு மற்றும் பக்க வாட்டில் உள்ள போல்களில் மீது மோதப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுடன்…

Read More
vinfast vf3

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை துவங்க உள்ள வினஃபாஸ்ட் நிறுவனத்தின் VF3 எலக்ட்ரிக் காரை தனது சொந்த நாடான வியட்நாமில் வெளியிட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்ட 66 மணி நேரத்தில் 27, 469 முன்பதிவுகளை பெற்றுள்ளது குறிப்பாக இந்த முன்பதிவு கட்டணமாக திரும்ப வழங்கப்படாத முறையில் வசூலிக்கப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை துவங்கும் வின்ஃபாஸ்ட் ஆரம்பகட்ட பணிகளை துவக்கி உள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் ரூபாய் 16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்ற இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. மூன்று கதவுகளை பெற்றுள்ள VF3 எலக்ட்ரிக் காரின் நீளம் 3190மிமீ அகலம் 1679 மிமீ மற்றும் உயரம் 1623 மிமீ கொண்டுள்ள மாடலில்  32 kW பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற காரில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 205 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More
leapmotor t03

2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ள லீப்மோட்டார் நிறுவனத்தின் T03 ஹேட்ச்பேக்  எலக்ட்ரிக் காரை பற்றி முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு ஸ்டெல்லண்ட்டிஸ் குழுமம் 20 % பங்குளை கைபற்றியிருந்த நிலையில் லீப்மோட்டாரில் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பா உட்பட இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான சந்தைகளில் விரவுப்படுத்த 49 % பங்குகளை ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் 51 %  பங்குகளை கொண்டுள்ளது. Leapmotor T03 லீப்மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேட்ச்பேக் ரக மாடலில் T03 காரில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. சீன சந்தையில் கிடைக்கின்ற மாடல் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் 21.6kwh, 31.9kwh மற்றும் 41.3kwh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. 2400 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள T03 எலக்ட்ரிக் காரில் 40kw பவர் மற்றும் 96 Nm…

Read More