புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் புதிய என்ஜின் பெற்ற MY2024 ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளேன் 401 பைக் விற்பனைக்கு ரூ.2.92 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர விட்பேன் 250 பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் 390 டியூக் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஸ்வார்ட்பிளேன் 401 மாடல் அதிகபட்சமாக 46 bhp பவரை வெளிப்படுத்துகின்றது. 2024 Husqvarna Svartpilen 401 நவீனத்துவமான முறையில் ரெட்ரோ ஸ்டைலை பெற்று விளங்குகின்ற ஹஸ்குவர்னா Svartpilen 401 பைக் மாடலில் புதிய 398.6cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொஒருத்தப்பட்டு அதிகபட்சமாக 46 bhp பவர் மற்றும் 39 Nm டார்க் வழங்குகின்றது. கூடுதலாக ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைந்த 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலில் கூடுதலாக ரைடு பை வயர், டிராக்ஷன் கண்ட்ரோல், சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பதற்கு ஏற்ற வகையில் ஐந்து இன்ச் TFT…
Author: BHP Raja
பாபர் ரக ஸ்டைல் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் விற்பனைக்கு ரூ.3.59 லட்சத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை மற்றும் முக்கிய அம்சங்களை பெற்றிருக்கின்றது. ஷாட்கன் 650 மாடலில் ஸ்டென்சில் வெள்ளை, பிளாஸ்மா நீலம், பச்சை டிரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்கு நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த பைக்கிற்கு போட்டியாளர்கள் இல்லை என்றாலும் சூப்பர் மீட்டியோர் 650க்கு சவாலாக அமைந்துள்ளது. Royal Enfield Shotgun 650 on road price ஏற்கனவே சந்தையில் உள்ள என்ஃபீல்டு 650சிசி மாடல்களில் இடம்பெற்றுள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளும் ஷாட்கன் 650 பைக் மாடலில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன்…
வரும் ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டாடா பஞ்ச்.இவி எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் மற்றும் பேட்டரி விபரம் உள்ளிட்ட சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. பஞ்ச்.இவி காரில் ஸ்டாண்டர்டு வேரியண்டில் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என 5 வேரியண்டுகளும், டாப் LR அடிப்படையில் அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என மூன்று வேரியண்டுகளும் பெற்று மொத்தம் ஐந்து டூயல்-டோன் நிற ஆப்ஷனை பெறுகின்றன. Tata Punch.ev Range டாடா மோட்டார்ஸ் நெக்ஸான்.இவி காரின் தோற்ற உந்துதல் மற்றும் இன்டிரியர் அடிப்படையில் என அனைத்தும் பெரும்பாலான வசதிகள் பெற்றிருக்கலாம். பஞ்ச்.இவி மாடலில் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 25 kWh பேட்டரி பேக் பெற்று 82 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும், முழுமையான சிங்கிள் சார்ஜில் 315 கிமீ ரேஞ்ச் வழங்கும்…
மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா மோட்டார்சைக்கிள் புதிய ஜாவா 350 பைக் மாடலை விற்பனைக்கு முன்று விதமான நிறங்களில் ரூ.2,14,950 விலையில் வெளியிட்டுள்ளது. தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள ஜாவா மாடலை போலவே அமைந்திருந்தாலும் என்ஜின் ஆனது பெராக் மற்றும் 42 பாபர் பைக்குளில் உள்ள 334சிசி என்ஜின் பெற்றிருந்தாலும் பவர் ஆனது குறைக்கப்பட்டுள்ளது. 2024 Jawa 350 புதிய 2024 ஆம் ஆண்டிற்கான ஜவா 350 பைக் மாடலில் ஆரஞ்ச், கருப்பு மற்றும் மெரூன் என மூன்று விதமான நிறங்களை பெற்றுள்ளது. 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட சேஸ் மற்றும் வடிவமைப்பினை பெறுவதனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் 178 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கை உயரம்…
ஹஸ்குவர்னா நிறுவனத்தின் புதிய ஸ்வார்ட்பிளேன் 401 இந்திய சந்தையில் ஜனவரி 21-23 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய கேடிஎம் 390 டியூக் என்ஜின் உட்பட பல்வேறு முக்கிய பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது. பஜாஜ் ஆட்டோ கீழ் செயல்படுகின்ற ஹஸ்குவர்னா இந்திய சந்தையில் விட்பிளேன் 250 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 250 ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது. Husqvarna Svartpilen 401 சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ள சேஸ் உட்பட 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பெறுவதுடன் இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது. கூடுதலாக, ஸ்லிப்ப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ரைடிங் தன்மையை வழங்கும் வகையில் மேம்பட்டட யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர்…
ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஜாவா பைக் மாடலில் முந்தைய 294cc என்ஜினுக்கு பதிலாக பெராக் பைக்கில் உள்ள 334cc என்ஜினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சந்தைக்கு வரவுள்ள ஜாவா 350 பைக் ஆனது ராயல் என்ஃபீல்டு 350 வரிசை, ஹோண்டா சிபி350, ஹார்லி-டேவிட்சன் X440 உட்பட வரவுள்ள ஹீரோ மேவரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. Jawa 350 ஏற்கனவே விற்பனையில் உள்ள ஜாவா 42 பாபர் மற்றும் பெராக் ஆகியவற்றில் உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள லிக்யூடு கூல்டு 334cc என்ஜின் ஆனது அதிகபட்சமாக 29 hp பவர் மற்றும் 32.7 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள அடிப்படையான ஜாவா பைக் டிசைனை தக்கவைத்துக் கொண்டு கூடுதலாக சில ஸ்டைலிஷான க்ரோம் பாகங்கள், புதிய நிறங்கள் மற்றும்…
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக காரின் இன்டிரியர் சந்தையில் உள்ள நெக்ஸான்.இவி காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் டாடா.இவி அறிமுகம் செய்த Acti.ev பிளாட்ஃபாரத்தை பெற்று முதல் மாடலாக பஞ்ச்.இவி விற்பனைக்கு வரவுள்ளது. Tata Punch.ev suv சிறிய ரக எஸ்யூவி சந்தையில் நல்ல வரவேற்பினை கொண்டுள்ள ICE பஞ்ச் அடிப்படையாக கொண்டு எலக்ட்ரிக் கார்களுக்கு உரித்தான பல்வேறு மாற்றங்களை பெற்று தயாரிக்கப்பட்டுள்ள காரின் இன்டிரியர் ஆனது இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு சுவிட்ச் பெற்று மத்தியில் ஒளிரும் வகையிலான டாடா லோகோ, மிதக்கும் வகையிலான 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், Arcade.ev ஆப் வசதி, ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய…
ஹீரோ மோட்டோகார்ப் பிரீமியம் சந்தையில் வெளியிட உள்ள முதல் மேவரிக் 440 ரோட்ஸ்டெர் பைக்கின் டிசைன் தொடர்பான படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் பைக்கின் தோற்ற அமைப்பு மற்றும் முகப்பு விளக்கு தொடர்பான வடிவத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. மேவரிக் பைக்கில் உள்ள அடிப்படையான வடிவமைப்பு சந்தையில் உள்ள ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கில் உள்ள சேஸ் உட்பட என்ஜின் என பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது. Hero Mavrick வெளியிட்டப்பட்ட மேவரிக் டீசர் டிசைன் மூலம் முகப்பில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று H வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் பெற்றிருக்கின்றது. டாப் வியூ தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள டிசைனில் ஒற்றை இருக்கை அம்சத்துடன் வட்ட வடிவ டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஹீரோ கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுவதுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் பெட்ரோல்…
தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் CES 2024 அரங்கில் VF3 எலெக்ட்ரிக் மினி எஸ்யூவி மற்றும் VF வைல்ட் எலக்ட்ரிக் பிக்கப் டிரக் கான்செப்ட் ஆகியவற்றை அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது. 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட உள்ள வின்பாஸ்ட் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.4000 கோடியில் ஒருங்கிணைந்த பேட்டரி மற்றும் வாகன தயாரிப்பு ஆலையை 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு திறக்க உள்ளது. Vinfast VF3 mini E-SUV CES 2024 அரங்கில் வெளியிடப்பட்டுள்ள மினி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் VF3 முழுமையான சிங்கிள் சார்ஜில் 201 கிமீ நிகழ் நேர ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. மினி எஸ்யூவி மாடல் மிக நேர்த்தியான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் வகையில் பாக்ஸ் டிசைனை பெற்று முன்புறத்தில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மத்தியில் க்ரோம்…