பஜாஜ் ஆட்டோவின் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்ற 2024 பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) டீலர்களுக்கு வர துவங்கியுள்ளதால் அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ளதால் முக்கிய விபரங்களை தொகுத்து அளித்துள்ளேன். என்ஜின் மற்றும் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றும் ஏற்படுத்தாமல் கூடுதலாக சில மதிப்புக்கூட்டப்பட்ட வசதிகளை பெறுகின்ற இந்த நேக்டு ஸ்டைல் பல்சரில் 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த பைக்கில் உள்ள 6 வேக கியர்பாக்ஸ் இலகுவாக கியரை மாற்ற ஏதுவாக அமைந்திருக்கின்றது. குறிப்பிடத்தக்க பல்சர் என்எஸ்200 மாற்றங்கள் பின்வருமாறு;- புதிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் பிரீடேட்டர் ஸ்டைலை பெற்று அதிகப்படியான வெளிச்சத்தை இரவு நேர ரைடர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. சமீபகாலத்தில் டிஜிட்டல் சார்ந்த வசதிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதனால் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்றது. டிஜிட்டல் கிளஸ்ட்டரை…
Author: BHP Raja
மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2024 ஆண்டிற்கான ஸ்கார்பியோ-N எஸ்யூவி மாடலில் Z8 செலக்ட் என்ற வேரியண்ட் ரூ.16.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதலாக மிட்நைட் பிளாக் என்ற நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. Z6 + வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக Z8 Select வேரியண்டில் R17 டயமண்ட் கட் அலாய் வீல், காபி பிளாக் லெதேரெட் இன்டிரியர், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி புரொஜெக்டர் ஃபோக்லாம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியவற்றுடன் அலெக்ஸா பில்ட்-இன் உடன் 60 க்கு மேற்பட்ட அட்ரெனாக்ஸ் கனெக்ட்டிவிட்டி அம்சம், டிரைவ் மோடு ஜிப், ஜாப், ஜூம் ஆகியவற்றையும் இந்த வேரியண்ட் கொண்டுள்ளது. அடிப்படையான நான்கு டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ், ஈஎஸ்பி, ஆறு ஏர்பேக்குகளை கொண்டுள்ளது. 7 இருக்கை பெற்ற மஹிந்திரா Scorpio-N Z8 Select வேரியண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கின்றது.…
ஏத்தர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட 450 அபெக்ஸ் இ-ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியுள்ளதால் வரும் வாரங்களில் டெலிவரி துவங்கப்பட உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 100 கிமீ வேகத்தியல் பயணிக்கும் திறன் பெற்றுள்ள இந்நிறுவன வேகமான மாடலாக அறியப்படுகின்றது. ரூ.1.89 லட்சம் விலையில் கிடைக்கின்ற அபெக்ஸ் ஸ்கூட்டரின் பிரத்தியேகமான நீல நிறம் கவர்ச்சியை அதிகரிப்பதுடன், ஆரஞ்ச் நிற அலாய் வீல், பின்புற பக்கவாட்டு பேன்லகள் உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவான பார்வைக்கு அறியும் வகையில் டிரான்ஸ்பெரன்ட் பேனல்களை பெற்றுள்ளது. 450X மாடல் 6.4 kW (8.5 bhp) பவருக்கு பதிலாக 7 kW (9.3 bhp) உற்பத்தி செய்யும் PMS மின்சார மோட்டாரை பெறுகின்ற இந்த ஸ்கூட்டரில் அதிகபட்ச டார்க் 26 Nm ஆக இருக்கும். 450 அபெக்ஸ் புதிய Wrap+ ரைடிங் மோடு பெறுவதுடன் 2.9 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தில் எட்டுவதுடன் 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை…
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மற்றும் எக்ஸ் என இரு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மாடல்களின் ரேஞ்ச், பேட்டரி, நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஐக்யூப் தோற்ற அமைப்பில் ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், தற்பொழுது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலுக்கு இணையான ஸ்டைலை கொண்டிருப்பதனால் பொதுவான பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவருகின்றது. அடுத்து பிரீமியம் ஸ்டைலில் வெளியான எக்ஸ் உயர் ரக பிரிவில் அமைந்துள்ளது. 2024 TVS iQube வழக்கமான வடிவமைப்பினை பெற்று மிக இலகுவாக அனுகும் வகையில் அமைந்துள்ள டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் பேஸ் வேரியண்ட் மற்றும் S வேரியண்ட் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. இந்த இரு வேரியண்டிலும் பொதுவாக 3.04Kwh பேட்டரியை பெற்றுள்ளது. இரு வேரியண்டுளும் ஈக்கோ மோடில் 70 முதல் 80 Km ரேஞ்சு வழங்கும்…
ரெனால்ட் கீழ் செயல்படுகின்ற டேசியா வெளியிட்டுள்ள புதிய ஸ்பிரிங் (Dacia Spring) எலக்ட்ரிக் ஆனது க்விட் இவி (Kwid EV) என்ற பெயரில் விற்பனைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. க்விட் இந்தியாவில் பிரபலமான காராக விளங்கும் நிலையில் துவக்கநிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் மாடலாக வரக்கூடும். முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ள டேசியா ஸ்பிரிங் காரில் 44bhp அல்லது 64bhp என இரண்டு விதமான பவரை வழங்குகின்ற எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 26.8kWh பேட்டரி பேக் ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. இரண்டு விதமான பவரை வழங்கினாலும் இந்த காரின் ரேஞ்ச் 220 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 44bhp பவரை வழங்கும் மாடல் அதிகபட்சமாக 11kW (AC) வரை விரைவு சார்ஜ்ரை ஆதரிக்கும் நிலையில், டாப் 64bhp வேரியண்டுகள் 30kW DC விரைவு சார்ஜ்ரை ஆதரவினை பெறுகின்றன. கூடுதலாக 7.4kW…
ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் (Taisor) கிராஸ்ஓவர் ரக மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் நிலையில் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது. மாருதியின் ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,00,000 விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியின் மூலம் ஃபிரான்க்ஸ் மாடலும் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. தோற்ற அமைப்பில் மற்றும் அடிப்படையான கட்டுமானம் ஒரே மாதிரியாக இருந்தாலும் முன்புற பம்பர் மற்றும் கிரில் மாற்றியமைக்கப்பட்டு டொய்யோட்டா கார்களுக்கு உரித்தான அம்சத்தை கொண்டிருக்கும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரில் வரவுள்ள மாடலில் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என…
காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட 2024 எக்ஸ்யூவி 300 மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்தான தகவலை அறிந்து கொள்ளலாம். 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் கிடைக்கின்ற பிரசத்தி பெற்ற டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எக்ஸ்யூவி 300 கிடைக்கின்றது. 2024 மஹிந்திரா XUV300 எஸ்யூவி முக்கிய எதிர்பார்ப்புகள் ;- புதிய எக்ஸ்யூவி300 காரில் 110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோலுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 117hp பவர் மற்றும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.…
2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா தற்பொழுது 10,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்து நடுத்தர எஸ்யூவி சந்தையில் முதன்மையான மாடலாக விளங்கி வருகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 2,80,000 யூனிட்டுகள் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள கிரெட்டா விற்பனை எண்ணிக்கை மாதந்தோறும் 12,000 கூடுதலான யூனிட்டுகளை விற்பனை செய்தி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 கிரெட்டா என விற்கப்படுகிறது. விற்பனை சாதனை குறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சிஓஓ திரு. தருண் கார்க் கூறுகையில், “ இந்திய வாடிக்கையாளர்களின் இதயங்களை ஹூண்டாய் கிரெட்டா வென்று, இந்தியாவை ‘Live the SUV’ என்ற பிராண்டாக மாற்றியுள்ளது. இந்திய சாலைகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான கிரெட்டா உடன், ‘CRETA’ பிராண்ட், மறுக்கமுடியாத எஸ்யூவி என்ற அதன் பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய்…
சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையம் (GNCAP) 2024 ஆம் ஆண்டிற்கான டாடா நெக்ஸான் எஸ்யூவியை பாதுகாப்பு தொடர்பான சோதித்த நிலையில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. விற்பனைக்கு நெக்ஸானை வெளியிட்ட முதலே பாதுகாப்பில் டாடா மோட்டார்ஸ் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளமால் திறன் மிகுந்த பாதுகாப்பான கட்டுமானத்தை வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட புதிய நெக்ஸான் தற்பொழுது ரூ.8.15 லட்சம் முதல் துவங்கி ரூ.15.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை சுமார் 77 வேரியண்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ளது. Tata Nexon 5 Star Ratings – GNACP GNCAP மையத்தின் புதிய பாதுகாப்பு தர சோதனை கடுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் சோதிக்கப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி மாடல் வயது வந்தோருக்கான பயணிகள் பாதுகாப்பில் (adult occupancy protection -…