எம்ஜி மோட்டாரின் இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) மாடலின் வேரியண்ட் பெயர் மாற்றப்பட்டிருப்பதுடன் கூடுதலாக Excite Pro என்ற வேரியண்ட் ரூ.19.98 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2024 MG ZS EV புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட் வரிசையின் படி ZS EV காரில் Executive, Excite Pro, Exclusive Plus, மற்றும் Essence என நான்கு விதமான வேரியண்டுகள் கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Excite Pro வேரியண்டில் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 6 ஸ்பீக்கருடன் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் உள்ளது. 25.7cm HD தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 75+ இணைக்கப்பட்ட கார் அம்சங்களுடன் i-SMART 2.0, டிஜிட்டல் கீ, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங், வெள்ளி நிற ரூஃப் ரெயில்கள் பெற்றுள்ளன. ZS EV மின்சார கார் நுட்பவிபரங்கள் பொதுவாக அனைத்து வேரியண்டிலும் 50.3kWh பேட்டரி பேக்குடன் 461km ரேஞ்ச் வெளிப்படுத்தும் ZS EV…
Author: BHP Raja
ரூ.10 லட்சத்திற்குள் நகர பயன்பாட்டிற்கு ஏற்ற எம்ஜி காமெட் EV காரில் சிறிய மேம்பாடுகளை பெற்று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் வேரியண்டின் பெயர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2024 MG Comet EV சில வாரங்களுக்கு முன்பாக காமெட் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து Pace, Play மற்றும் Plush என்ற வேரியண்டின் பெயர்கள் மாற்றப்பட்டு தற்பொழுது Executive, Excite மற்றும் Exclusive என பெயரிடப்பட்டு கூடுதலாக Excite FC, Exclusive FC வேரியண்டுகள் 7.4kW AC விரைவு சார்ஜிங் வசதியை பெறுகின்றது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட பொழுது 3.3kW AC சார்ஜிங் ஆப்ஷன் மட்டுமே பெற்றிருந்த நிலையில் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 7 மணி நேரமும், 0-80 % பெற 5.5 மணி நேரமும் எடுத்துக் கொள்ளுகின்றது. புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 7.4kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பெறுகின்ற வேரியண்டுகளின் சார்ஜிங் நேரம் 0-100 % பெற…
உலகின் அதிக மைலேஜ் தரும் முதல் சிஎன்ஜி பைக் மாடலை விற்பனைக்கு நடப்பு 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். Bajaj CNG Bike சமீபத்தில் CNBC TV18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜீவ் பஜாஜ் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சந்தையுடன் பிரீமியம் பைக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் முதல் சிஎன்ஜி பைக் மாடல் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு வருவதனை அதிகார்ப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். முன்பாக இந்த மாடல் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்த சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களை தொடர்ந்து பைக்குகளும் வெளியாக உள்ளதால் மிகப்பெரிய அளவில் இரு சக்கர வாகன சந்தை மாறுதலை சந்திக்க உள்ளது. Bruzer E101 என்ற பெயரில் தயாரித்து வருகின்ற பஜாஜ் ஆட்டோவின் துவக்க நிலையில் உள்ள தயாரிப்பு பணிகள் நிறைவுற்று மிக…
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.25,000 வரையிலான S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை தள்ளுபடி அறிவிப்பு நடப்பு மார்ச் 31,2024 வரை பொருந்தும் என ஓலா எலக்ட்ரிக் உறுதிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஓலாவின் விலை குறைப்பு சலுகைகளின் படி ஓலா எஸ்1 புரோ வேரியண்டிற்கு ரூ.17,500 தள்ளுபடியும், எஸ் 1 ஏர் மாடலுக்கு ரூ.15,000 மற்றும் குறைந்த விலை எஸ் 1 எக்ஸ் ஸ்கூட்டருக்கு அதிகபட்ச தள்ளுபடி ரூ.25,000 அறிவிக்கப்பட்டது. Ola Escooter S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டுள்ள மாடல் ஆனது அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு மணிக்கு 120kmph கொண்டு சிங்கிள் சார்ஜில் 195 கிலோமீட்டர் ரேஞ்ச் வெளிப்படுத்தும் இந்த மாடல் விலை ரூ.1,47,499 உள்ள நிலையில் ரூ.17,500 குறைக்கப்பட்டு ரூ.1.30 லட்சம் ஆக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டராக அறியப்படுகின்ற S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3Kwh பேட்டரி பெற்ற…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டில் மீண்டும் வீடா V1 Plus விற்பனைக்கு ரூபாய் 1.15 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக இந்த வேரியண்ட் ஆனது நீக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் விற்பனைக்கு வெளியாகி உள்ளது. இது டாப் வீடா V1 ப்ரோ வேரியன்டை விட ரூபாய் 15000 விலை குறைவாக அமைந்திருக்கின்றது. இரு மாடல்களுக்கும் பொதுவாக பேட்டரி மற்றும் டாப் ஸ்பீடு உள்ளிட்டவைகளில் வித்தியாசம் உள்ளது மேலும் ரேஞ்ச் ஆனது 10 கிலோ மீட்டர் வரை குறைவாக கிடைக்கின்றது. குறைந்த விலையில் வந்துள்ள வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வி1 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் மாடல் 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது விடா வி1 புரோ வேரியண்ட் 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 110 கிமீ வரை கிடைக்கும். 7-இன்ச் டச்ஸ்கிரீன்…
பஜாஜ் ஆட்டோ 2024 ஆம் ஆண்டிற்கான பல்சர் NS125 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1.13 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.5,500 வரை விலை உயர்ந்துள்ளது. என்எஸ் 125 பைக்கில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 hp 8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான பல்சர் பைக்குகளில் இடம்பெற்றிருக்கின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு,…
இந்தியாவில் Husqvarna நிறுவனத்தின் ரெட்ரோ மற்றும் மாடர்ன் ஸ்டைல் பெற்ற Svartpilen 250 ஸ்கிராம்பளர் மற்றும் Vitpilen 401 க்ஃபே ரேசர் என இரண்டும் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம். இரு மோட்டார்சைக்கிளிலும் பொதுவாக கேடிஎம் நிறுவன 250cc லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 31hp மற்றும் 25Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. 6 வேக கியர்பாக்ஸ் உடன் க்விக் ஷிஃபடர் மற்றும் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும். ட்ரெல்லிஸ் சேசிஸ் கொண்டுள்ள ஸ்விராட்பிளேன் 250 பைக்கில் 43mm WP USD ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் பெற்றுள்ள பைக்கின் முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் உள்ளது. இந்த மாடலில் புதிய 5 இன்ச் எல்சிடி, டிராக்ஷன் கட்டுப்பாடு, ரைடு பை வயர், க்விக் ஷிப்டர்+, சுவிட்சபிள் ஏபிஎஸ் மற்றும் சி-வகை சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.…
மீண்டும் ஃபோர்டு இந்திய சந்தையில் தனது மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர தயாராகியுள்ள நிலையில் காம்பேக்ட் எஸ்யூவி டிசைனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஏற்கனவே எண்டோவர், மஸ்டாங் Mach-E உள்ளிட்ட மாடல்கள் தொடர்பான காப்புரிமை , பெயருக்கான வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையின் விற்பனை முடிவை கைவிட்டதை தொடர்ந்து எப்பொழுது ஃபோர்டு மீண்டும் சந்தையில் நுழையும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது புதிய டிசைன் ஒன்றை காப்புரிமை பெற்றுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே மஹிந்திரா மற்றும் ஃபோர்டு கூட்டணியில் உருவாக்கப்படுகின்ற எக்ஸ்யூவி 700 அடிப்படையிலான மாடல் என்று 2021 ஆண்டு கூறப்பட்டு வந்த நிலையில் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது. மீண்டும் சந்தையில் ஃபோர்டு எண்டோவர், ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் விலைக்குகள் ஒரு புதிய எஸ்யூவி வெளியிடலாம் என எதிர்பார்க்கின்றோம். தற்பொழுது வரை ஃபோர்டு இந்தியா எந்தவொரு அதிகாரப்பூர்வ…
ஹீரோ நிறுவனத்தின் புதிய 125சிசி என்ஜின் பெற்று ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை கொண்ட எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R) மாடலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளதால் மார்ச் மாதம் டெலிவரி துவங்கப்பட உள்ளது. முழுமையாக திரும்ப அளிக்கப்படுகின்ற வகையில் ரூ.2,500 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பு பெற்று அக்ரோஷமான முன்புறத்தை கொண்டுள்ள எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் பைலட் ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ள மாடலின் மிக நேர்த்தியான டேங்க் எக்ஸ்டென்ஷன் அகலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இருபிரிவுகளை கொண்ட இருக்கைகள், மேல்நோக்கிய பின்புற பகுதி என மிக நேர்த்தியாக டைமண்ட் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் ஸ்விங்கார்ம் ஆனது ட்யூபலர் முறையில் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 125ஆரில் உள்ள 124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் எஞ்சின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று ஒரு லிட்டருக்கு 66…