இந்தியாவின் சோனாலிகா இன்டர்நேஷனல் டிராக்டர் லிமிடேட் நிறுவனத்தின் சாலிஸ் பிராண்டில் சாலிஸ் (Solis) 120 hp டிராக்டர் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் 120 ஹெச்பி டிராக்டர் மாடலை இந்திய நிறுவனம் தன்னுடைய சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான சோனாலிகா சர்வதேச அளவில் 24க்கு மேற்பட்ட ஐரோப்பியா நாடுகளுக்கு டிராக்டர்களை ஏற்றுமதி செய்யும் ஒரே நிறுவனமாகும். அல்ஜிரியா சந்தையில் 60 சதவீத மதிப்பு , நேபால் 22 சதவீத சந்தை மதிப்பு , பங்களாதேஷ் 20 சதவீத மதிப்பினை மேலும் பல நாடுகளில் சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ளது. இந்தியாவின் அதிக டிராக்டர்களை ஏற்றுமதி செய்யும் தயாரிப்பாளர்களில் முன்னிலை வகிக்கின்றது.
சோனாலிகா சாலிஸ் 120 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர் கொண்ட டர்போசார்ஜடு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 24+24 கியர்பாக்ஸ் இடம்பெற்று 4500 கிலோ கிராம் வரை பழுவினை உயர்த்தும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.
சாலிஸ் பிராண்டில் 26 hp டிராக்டர்கள் ஐரோப்பியா சந்தையில் மிக பிரபலமாக உள்ளது. சாலிஸ் பிராண்டில் 20 hp முதல் 110 hp வரையிலான பிரிவுகளுடன் தற்பொழுது 120 hp மாடலும் இணைந்துள்ளது. சோனாலிகா டிராக்டர்கள் சிறப்பான தரம் மற்றும் செயல்திறனை மிக்கவையாக விளங்குகின்றது.