நமது நாட்டின் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி காரில் புதிய புரோன்ஸ் பச்சை (TUV300 bronze green colour) வண்ணத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்டரின் பேரில் மட்டுமே டியூவி 300 காரில் இந்த நிறம் கிடைக்கும்.
எவ்விதமான தோற்ற மாற்றங்கள் , எஞ்ஜின் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள புதிய பிரத்யேக வண்ணத்தின் விலையிலும் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது என தெரிகின்றது. புதிய புரோன்ஸ் கிரீன் வண்ணம் ஆர்டரின்பேரில் மட்டுமே கிடைக்கும்.
84பிஎச்பி (81பிஎச்பி ஏஎம்டி) ஆற்றலை வெளிப்படுத்தும் 2 கட்ட டர்போசார்ஜரை கொண்ட புதிய எம்ஹாக் 80 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 230என்எம் ஆகும். 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
மேலும் டியூவி300 எம்ஹாக் 100 இஞ்ஜின் ஆப்ஷனிலும் டியூவி300 எஸ்யூவி 102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.04 கிமீ ஆகும்.
இரு எஞ்ஜின் ஆப்ஷனிலும் ஏஎம்டி மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் என இரு வேரியண்டிலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.