4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி சந்தையில் சற்று உயரமான வடிவமைப்பினை பெற்ற டிசைனில் வந்துள்ள கியா சிரோஸ் மாடலில் லெவல்-2 ADAS உட்பட 30 அங்குல டிரின்டி பனரோமிக் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
சிரோஸ் அல்லது சைரா என்றும் அழைக்கப்படுகிற கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவுக்கூட்டத்தின் பெயரினை சூட்டியுள்ளது.
Kia Syros
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற்றுள்ள சிரோஸ் பவர் மற்றும் டார்க் விபரம் பின் வருமாறு;-
- 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச்டிரான்ஸ்மிஷன் உள்ளது.
- 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள சிரோஸ் மாடலில் 116 PS பவர், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது.
சிரோஸ் காரில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என மொத்தமாக 6 விதமான வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.
சிரோஸ் டிசைன்
3,995 மிமீ நீளம், 1,805 மிமீ அகலம், மற்றும் 1,605 மிமீ உயரம் கொண்டுள்ள சிரோஸ் எஸ்யூவி காரின் வீல்பேஸ் 2,550 மிமீ (சொனெட் 2,500மிமீ) ஆக உள்ள நிலையில் டாப் வேரியண்டில் 17 அங்குல வீல் கொடுக்கப்பட்ட சற்று உயரமான எஸ்யூவி போல அமைந்து முன்புறத்தில் செங்குத்தான எல்இடி ரன்னிங் விளக்குடன் மூன்று க்யூப் வடிவிலான எல்இடி புராஜெக்டர் விளக்கு உள்ளது.
பாக்ஸ் வடிவ டிசைனை நினைவுப்படுத்துகின்ற இந்த காரில் மிக அகலமான பனரோமிக் சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆன்டனா, பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது. இதுனுடைய தோற்ற அமைப்பு சமீபத்தில் கியா வெளியிட்ட EV3 உட்பட மற்ற EV வரிசையில் உள்ள வாகனங்களை போல அமைந்திருக்கின்றது.
நீலம், வெள்ளை, சில்வர், கிரே, சிவப்பு, இம்பீரியர் நீலம், பிவ்டெர் ஆலீவ் மற்றும் கருப்பு என 8 விதமான நிறங்களை கொண்டுள்ளது.
சிரோஸ் இன்டிரியர்
இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை 5 இருக்கைகளை கொண்டுள்ள சிரோஸ் HTX+(O) வேரியண்டில் டேஸ்போர்டில் 30 அங்குலத்தில் அகலமான டிரின்ட்டி பனரோமிக் சன்ரூஃப் இடம்பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் உள்ள ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு சுவிட்சுகள் அமைந்துள்ளன.
மற்ற வேரியண்டுகளில் 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. குறிப்பாக ஏர் ப்யூரிஃபையர், டேஸ்கேமரா, 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் பின்புற இருக்கைகளுக்கு வென்டிலேசன் வசதி உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்
அடிப்படையான பாதுகாப்பு வசதிகளில் அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் அவசரநிலை நிறுத்த சமிக்ஞை, முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை உணரும் ஆட்டோ கதவு பூட்டுகள், முன் மற்றும் பின் அனைத்து இருக்கை 3-புள்ளி சீட் பெல்ட்கள் நினைவூட்டல், ISOFIX (பின் ஆங்கர்கள்), முன் பயணிகள் ஏர்பேக் ஆன்/ ஆஃப் ஸ்விட்ச் முன் பயணிகள் ஏர்பேக் ஆன்/ ஆஃப் இன்டிகேட்டர் போன்றவை உள்ளன.
டாப் HTX+(O) வேரியண்டில் முன் மோதல் எச்சரிக்கை, பிளைன்ட் வியூ மானிட்டர், லேன் கிப் அசிஸ்ட் என 16க்கு மேற்பட்ட வசதிகளை பெற்ற LEVEL-2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
4 மீட்டருக்கு குறைவான நீளமுள்ள கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மாருதி சுசூகி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO, ஸ்கோடா கைலாக், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளுகின்றது.
சிரோஸ் அறிமுக விபரம் மற்றும் விலை
வரும் ஜனவரி 17ல் நடைபெற உள்ள பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போவில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு விலை அறிவிக்கப்பட்டு டெலிவரி உடனடியாக துவங்கப்படலாம்.