ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450 வரிசையில் உள்ள 450S, 450X உட்பட ரிஸ்டா ஆகிய மாடல்களின் விலை ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை ஜனவரி 1, 2025 முதல் உயர்த்தப்பட உள்ளது. நாட்டின் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிபாளர்கள் தங்களின் வாகனத்தின் விலையை ஜனவரி 2025 முதல் உயர்த்த உள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருக்கின்ற நிலையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஏதெரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிறுவனம் 2.9kWh மற்றும் 3.7kWh என இரண்டு விதமான பேட்டரி பேக்கினை பயன்படுத்தி 450S மாடலின் ஆன்ரோடு விலையை ரூ. 1,34,538 முதல் டாப் வேரியண்டின் விலை ரூ. 1,64,373 வரை கொண்டுள்ளது.
அடுத்து ரிஸ்டா இ-ஸ்கூட்டரின் விலையை ரூ.1,18,079 முதல் ரூ.1,55,094 வரை விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக நடப்பு டிசம்பர் மாத்ததில் சிறப்பு சலுகையாக ரூ.20,000 வரை வழங்குகின்றது. இதன் மூலம் Eight70 பேட்டரி வாரண்டி, 5,000 கேஸ்பேக் உள்ளிட்ட சலுகைகளுடன் கிடைக்கின்றது.