ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான QC1 மாடலின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
Honda QC1
இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள க்யூசி1 மாடலின் டிசைன் அடிப்படையில் தான் ஆக்டிவா இ போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலையான பேட்டரி முறையை பெற்று குறைந்த தொலைவு மட்டும் பயணிக்கின்ற தினசரி அலுவலகம், கல்லூரி செல்பவர்களுக்கு, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற பயன்பாடிற்கு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
1.5Kwh லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு 3 பேஸ் BLDC மோட்டார் பவர் 1.5Kw மற்றும் 77 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையாக சார்ஜ் செய்திருந்தால் அதிகபட்சமாக 80 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மாடலில் ஸ்டாண்டர்ட் மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 50Km வரை எட்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 330 வாட்ஸ் ஆஃப் போர்டு சார்ஜர் வழங்கப்பட்டு 0-80 % சார்ஜிங் பெற 4 மணி நேரம் 30 நிமிடங்களும், 0-100 % சார்ஜிங் பெற 6 மணி நேரம் 50 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. முழுமையாக சார்ஜ் ஏறினால் தானாக கட் ஆகின்ற நுட்பத்தை கொண்டுள்ளது.
க்யூசி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அண்ட்ர் போன் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு பரிமாணங்கள் நீளம் 1,826mm அகலம் 701mm மற்றும் உயரம் 1,129mm, அடுத்து வீல்பேஸ் 1,275mm மற்றும் கெர்ப் எடை வெறும் 89.5 கிலோ கிராம் கொண்டுள்ள ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 169mm ஆக உள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, அலாய் வீல் பெற்று இரு பக்கத்திலும் டிரம் பிரேக் பெற்று 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110 மிமீ டிரம் உடன் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கம் 90/90-12 மற்றும் 90/100-10 ட்யூப்லெஸ் டயருடன் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது. ஆக்டிவா இ போல அல்லாமல் இந்த மாடல் 26 லிட்டர் பூட் ஸ்பேஸ்
5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று அடிப்படையான வசதிகளை பெறுகின்ற இந்த ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் மாடலுக்கு சார்ஜர், பேட்டரி, மோட்டார் மற்றும் வாகனத்திற்கு என 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ எது முதலில் வருகிறதோ அதுவரை வாரண்டி வழங்கப்படுகின்றது.
ஹோண்டா க்யூசி1 இ-ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள்
Honda QC1: specs Standard | |
வகை | எலெக்ட்ரிக் |
மோட்டார் வகை | BLDC மோட்டார் |
பேட்டரி | 1.5Kwh Lithium ion, Fixed |
அதிகபட்ச வேகம் | 50 Km/h |
அதிகபட்ச பவர் | 1.5 KW Nominal |
அதிகபட்ச டார்க் | 77 Nm |
அதிகபட்ச ரேஞ்சு | 80Km/ charge (IDC Claimed) |
சார்ஜிங் நேரம் | 330W Charger 0-80 % 4 hrs 30 mins 0-100 % 6 hrs 50 mins |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
ரைடிங் மோட் | Econ, Standard |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | டூயல் ஷாக் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm |
பின்புறம் | டிரம் 110 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/100-10 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
ஹெட்லைட் | எல்இடி |
சார்ஜர் வகை | 330 வாட்ஸ் சார்ஜர் |
கிளஸ்ட்டர் | 5 இஞ்ச் LCD |
பரிமாணங்கள் | |
நீளம் | 1826 mm |
அகலம் | 701 mm |
உயரம் | 1129 mm |
வீல்பேஸ் | 1275 mm |
இருக்கை உயரம் | 675 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 169 mm |
பூட் கொள்ளளவு | 26 Liter |
எடை (Kerb) | 89.5 kg |
ஹோண்டாவின் QC1 எலெக்ட்ரிக் நிறங்கள்
பேர்ல் மிஸ்டி வெள்ளை, பேர்ல் செரினிட்டி நீலம், மேட் ஃபோகி சில்வர், பேர்ல் ஷாலோ நீலம், மெட்டாலிக், மற்றும் பேர்ல் இக்னியஸ் பிளாக் என 5 விதமான நிறங்களை க்யூசி 1 பெறுகின்றது.
Honda QC1 on-Road Price in Tamil Nadu
2024 ஹோண்டா QC1 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
விலை ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் அனேகமாக ரூ.1,00,000 விலைக்குள் துவங்கலாம்.
Honda QC1 Rivals
இந்திய சந்தையில் கிடைக்கின்ற ரூ.1 லட்சம் விலையில் உள்ள மாடல்களான டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா, ஹீரோ வீடா வி1, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.
Faq ஹோண்டா ஆக்டிவா க்யூசி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?
க்யூசி1 முழுமையான சிங்கிள் பேட்டரி ஸ்வாப்பில் 80 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 45-55 கிமீ கிடைக்கலாம்.
QC1 பவர் மற்றும் டார்க் விபரம் ?
3 பேஸ் BLDC மோட்டார் பவர் 1.5Kw மற்றும் 77 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
ஹோண்டா க்யூசி1 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
க்யூசி1 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 2025ல் விலை தெரியவரும்.
ஹோண்டா QC1 மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?
330 வாட்ஸ் ஆஃப் போர்டு சார்ஜர் வழங்கப்பட்டு 0-80 % சார்ஜிங் பெற 4 மணி நேரம் 30 நிமிடங்களும், 0-100 % சார்ஜிங் பெற 6 மணி நேரம் 50 நிமிடங்கள் தேவைப்படுகின்றது.
2025 Honda QC1 e scooter Image Gallery
2025 Honda QC1 Brochure Images