Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

8 வருடம் அல்லது 80,000 கிமீ வரை வாரண்டியை அறிவித்த ஏதெர் எனர்ஜி

by Automobile Tamilan Team
26 November 2024, 1:08 pm
in Auto Industry
0
ShareTweetSend

ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர் இருக்கை

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் தற்போது 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பேட்டரி உத்தரவாதத்தை வழங்கும் வகையிலான புதிய Eight70TM  திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

முன்பாக ஏத்தரின் ப்ரோ பிளானில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அதே புரோ பேக்கில் உள்ள வாடிக்கையாளர்கள் ரூபாய் 4999 கூடுதல் கட்டணமாக செலுத்தினால் எட்டு வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வாரண்டியை நீட்டித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Eight70TM திட்டத்தில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் எட்டு வருடங்கள் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த பிறகும் பேட்டரியின் சார்ஜிங் தரம் சதவீதம் 70 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தாலும் வாரண்டியில் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கூடுதலாக இரண்டாவது வாடிக்கையாளராக இந்த ஸ்கூட்டரை வாங்கி இருந்தாலும் கூட பேட்டரி வாரண்டி பொருந்தும் அதே நேரத்தில் நீண்ட காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்காமல் இருந்து பேட்டரி சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தாமல் போனால் கூட இந்த வாரண்டி பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ஏத்தரின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் சிங் ஃபோகேலா கூறுகையில், “EV வாங்குபவர்களுக்கு பேட்டரி ஆயுள் ஒரு முக்கியமான காரணியாகும். வாடிக்கையாளர்களின் மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரிகளின் ஆயுட்காலம் மற்றும் மாற்றுவதற்கான செலவுகள் குறித்த எழுகின்ற அச்சத்தை பற்றி கேள்விப்படுகிறோம். இந்தக் கவலையைப் புரிந்துகொண்டு, எங்களின் புதிய Eight70TM வாரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளோம், இது 8 ஆண்டுகள் வரை 70% பேட்டரி ஆரோக்கிய உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த உத்தரவாதமானது EV வாங்குபவர்கள் தங்கள் ஸ்கூட்டர் பேட்டரிகளின் நீண்ட கால ஆரோக்கியம் குறித்து கொண்டிருக்கும் கவலைகளை நீக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

ather eight 70 tm battery warranty

Related Motor News

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

தமிழ்நாட்டில் 400 ஏதெர்க்ரீட் விரைவு சார்ஜ்ர்களை கடந்த ஏதெர் எனர்ஜி

Tags: Ather 450Xஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan