நவம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா e ஸ்கூட்டர் மாடல் தொடர்பாக வந்துள்ள டீசரில் 104 கிமீ ரேஞ்ச் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இரண்டு நீக்கும் வகையிலான பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பெறுவது உறுதியாகியுள்ளது.
சர்வதேச அளவில் சில நாடுகளில் கிடைக்கின்ற CUV e: எலெகட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் வரவுள்ள மாடல் என ஏறக்குறைய தற்பொழுது வரை ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர்கள் மூலம் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஐரோப்பா உட்பட இங்கிலாந்தில் 2x Swap 48V / 1.3kWh பேட்டரி பேக்கினை பெற்று அதிகபட்சமாக உண்மையான ரேஞ்ச் 70 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டு விற்பனையில் உள்ள நிலையில் இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலில் 7 அங்குல கிளஸ்ட்டரில் 104 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் 100 % சார்ஜிங்கில் என தெரிய வந்திருக்கின்றது. ஒரு வேளை இந்திய சந்தைக்கான மாடலின் பேட்டரி திறன் கூடுதலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்ஜிங் நேரம் சர்வதேச அளவில் 0-75 % பெற 6 மணி நேரம் தேவைப்படும் எனவும், அல்லது Honda Mobile Power Pack e: மூலம் பேட்டரி ஸ்வாப் செய்ய அனுமதிக்கின்றது.
மற்றபடி, 7 அங்குல TFT உடன் ஹோண்டாவின் RoadSync Duo கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் நேவிகேஷன் பெறும் டாப் வேரியண்ட் மற்றும் குறைந்த விலை மாடலில் 5 அங்குல கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இருக்காது.
இரு வேரியண்டிலும், ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட் மற்றும் ஈகோன் என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்று டாப் ஸ்பீடு 83 கிமீ ஆக இருக்கலாம், மேலும் 12 அங்குல வீல் உடன் ட்வீன் ஷாக் அப்சார்பருடன், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டிருக்கும்.
ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஹீரோ வீடா வி1 எலெகட்ரிக் ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தலாம்.