இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் தற்பொழுது பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தென் ஆப்பிரிக்க சந்தைக்கு 2,700 கார்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2020 முதல் மேக்னைட் எஸ்யூவி மாடலின் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா நிறுவனம் சுமார் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கூடுதலான கார்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளது இந்தியாவில் எவ்வளவு கார்களை மாதம் தோறும் விற்பனை செய்கின்றதோ அதே அளவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது குறிப்பாக இந்திய சந்தையில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலாக தொடர்ந்து இருந்து வந்த நிலையில் தற்பொழுது தான் கூடுதலாக எக்ஸ்-ட்ரையில் மாடலை அறிமுகம் செய்திருந்தது.
2025 ஆம் ஆண்டின் மத்தியில் இந்நிறுவனம் டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் 7 இருக்கை பிக்ஸ்டெர் அடிப்படையிலான நிசான் மாடல் என இரண்டு கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டு இருக்கின்றது. கூடுதலாக குறைந்த விலை எலெக்ட்ரிக் காரையும் வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றது.