மஹிந்திராவின் தார் ராக்ஸ், XUV 3XO, XUV 400 EV என மூன்று கார்களுக்கான பாதுகாப்பு தரம் குறித்த பாரத் கிராஷ் டெஸ்ட் (BNCAP) மூலம் சோதனை செய்யப்பட்டதில் ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.
தார் ராக்ஸ் எஸ்யூவி
சமீபத்தில் அறிமுகமான ஐந்து கதவுகளை கொண்ட தார் மிக சிறப்பான வரியில் வரவேற்பினை பெற்று இருக்கின்ற நிலையில் பாரத் கிராஸ் டெஸ்டில் இந்த மாடலின் ஆரம்ப நிலை MX3 மற்றும் AX5L என இரண்டு வேரியண்டும் சோதனை செய்யப்பட்டதில் மிகச் சிறப்பான வகையில் பாதுகாப்பு தரத்தினை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 31.09 புள்ளிகளை பெற்றிருக்கின்றது. அதேபோல குழந்தைகள் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளை கொண்டுள்ளது.
ஓட்டுனர் மற்றும் உடன் பயன்படுத்தவருக்காக பாதுகாப்பில் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பும் நெஞ்சு பகுதி மேலும் கால் கணுக்காலுக்கு ஓரளவு பாதுகாப்பினையும் வழங்குகின்றது.
மஹிந்திரா XUV 3XO
அடுத்து மஹிந்திரா XUV 3XO மாடல் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் என இரண்டிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள குறிப்பாக பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 29.36 புள்ளிகளை பெற்றிருக்கின்றது. அதேபோல குழந்தைகள் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு 43 புள்ளிகளை பெற்றுள்ளது.
மஹிந்திரா XUV 400 EV
மஹிந்திரா XUV 400 EV மாடல் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் என இரண்டிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள குறிப்பாக பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 30.38 புள்ளிகளை பெற்றிருக்கின்றது. அதேபோல குழந்தைகள் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு 43 புள்ளிகளை பெற்றுள்ளது.