Upcoming — வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 மோட்டார்சைக்கி்ள் விற்பனைக்கு வரும் ஜனவரி 2025ல் எதிர்பார்க்கப்படுகின்ற என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை எதிர்பார்ப்புகள் என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2025 Royal Enfield Classic 650
என்ஃபீல்டின் 650cc என்ஜின் கொண்ட ஆறாவது மாடலாகவும், விற்பனைக்கு வரவுள்ள இரண்டாவது கிளாசிக் ஸ்டைல் மாடலாகவும் கிளாசிக் 650 தொடர்ந்து தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. குறிப்பாக பிளாக்கிங் க்ரோம், டீல், பர்ன்டிங் தோர்ப் ப்ளூ, மற்றும் வல்லம் ரெட் என 4 விதமான நிறங்களை பெறுகின்றது.
இரண்டு எக்ஸ்ஹாஸ்ட் பெற்ற 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முழுமையான நுட்பவிபரங்களை ராயல் என்ஃபீல்டு வெளியிடாத நிலையில் தற்பொழுது வரை கிடைத்துள்ள நுட்பவிபரங்களின் படி, மற்ற 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட கூடுதல் எடை பெற்ற மாடலாக அதிகபட்ச எடை 243 கிலோ பெற்று நீளம் 2318 mm, அகலம், 892 mm மற்றும் உயரம் 1137 mm பெற்றுள்ள மாடலின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 154 மிமீ ஆகும்.
கிளாசிக் 650 மாடலின் சஸ்பென்ஷன் அமைப்பின் முன்புறத்தில் 43 டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடன் முன்புறம் 100/90 – 19 57P மற்றும் பின்புறத்தில் 140/70-18 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வரவுள்ளது.
யூஎஸ்பி சார்ஜர் போர்ட், வட்ட வடிவத்திலான செமி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை பெற்றுள்ளது.எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு,அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளை கிளாசிக் 350 மாடலில் உள்ளதை பகிர்ந்து கொள்ளுகின்றது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | இன்-லைன் ட்வீன் , 4 stroke |
Bore & Stroke | 47 x 63.121 mm |
Displacement (cc) | 648 cc |
Compression ratio | 9.5:1 |
அதிகபட்ச பவர் | 47.4 PS (34.9 kW) @ 7250 rpm |
அதிகபட்ச டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | ஸ்டீல் ட்யூப்லெர் ஸ்பைன் சேஸ் |
டிரான்ஸ்மிஷன் | 6 வேக மேனுவல் |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | ட்வீன் ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 320 mm |
பின்புறம் | டிஸ்க் 300 mm (with ABS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | ஸ்போக் |
முன்புற டயர் | 100/90-19 M/C 57H |
பின்புற டயர் | 140/80-17 M/C 69H ட்யூப் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V – 12 Ah VRLA பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2318 mm |
அகலம் | 892 mm |
உயரம் | 1137 mm |
வீல்பேஸ் | 1475 mm |
இருக்கை உயரம் | 800 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 14 mm |
எரிபொருள் கொள்ளளவு | 14.8 litres |
எடை (Kerb) | 243kg |
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 நிறங்கள்
கிளாசிக் 650 மாடலில் பிளாக்கிங் க்ரோம், டீல், பர்ன்டிங் தோர்ப் ப்ளூ, மற்றும் வல்லம் ரெட் என 4 விதமான நிறங்களை பெற்றுள்ளது.
Royal Enfield Classic 650 twin on-Road Price in Tamil Nadu
2025 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கின் ஆன்ரோடு விலை அறிவிக்கப்படவில்லை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட புதுச்சேரி இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
அதிகாரப்பூர்வ விலை வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ரூ.3.50 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Royal Enfield Classic 650 rivals
பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 உட்பட மற்ற ராயல் என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளும் சவாலினை ஏற்படுத்தும்.
Faqs about Royal Enfield Classic 650
ராயல் என்ஃபீல்டு Classic 650 பைக்கின் ஆன்-ரோடு விலை ?
அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை., தோராயமாக ரூ. 4.25 லட்சம் முதல் ரூ.4.50 லட்சத்திற்குள் அமையலாம்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 வேரியண்ட் விபரம் ?
கிளாசிக் 650 மாடலில் தற்பொழுது வேரியண்ட் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் நான்கு நிறங்கள் பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கின் என்ஜின் விபரம் ?
648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.