வரும் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்ற விழாவில் மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட BE 6e மற்றும் XEV 9e என இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
XEV மற்றும் BE
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள XEV மற்றும் BE என இரண்டு பிராண்டுகளிலும் தலா ஒன்று என இரண்டு மாடல்கள் வரவுள்ளது. இதில் முதல் மாடலாக வரவுள்ள XEV 9e ஏற்கனவே கான்செப்ட் நிலையில் XUV.e9 என அறியப்பட்டு வந்தது.
அடுத்தப்படியாக, BE (Born Electric) என்ற பிராண்டில் முன்பாக BE.05 என காட்சிப்படுத்திய கான்செப்ட் ரக மாடல் விற்பனைக்கு BE 6e என வெளிடப்பட உள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.
மஹிந்திரா XEV 9e
மிகவும் தாராளமான இடவசதியுடன் பல்வேறு ஸ்டைலிஷான அம்சங்களை பெற்ற XEV 9e கூபே ரக ஸ்டைலை கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் இன்டீரியரில் இரண்டு அகலமான தொடுதிரை செட்டப் கொடுக்கப்பட்டு 70kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 450-550 கிமீ ரேஞ்ச் வெளிப்படுதலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5 இருக்கைகளை பெற உள்ள எக்ஸ்இவி 9இ காரின் பரிமாணங்கள் 4,790 மிமீ நீளம், 1,905 மிமீ அகலம் மற்றும் 1,690 மிமீ உயரம், 2,775 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும் என மஹிந்திரா வெளிப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா BE 6e
முன்பாக BE05 எஸ்யூவி கார் என அறியப்பட்ட மாடல் தற்பொழுது பிஇ 6இ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் முன்பே மஹிந்திரா வெளியிட்ட அளவுகளின் படி, 4370 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1635 மீ உயரம், 2775 மீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் வாகனம் (Sports Electric Vehicle- SEV) என குறிப்பிட்டிருந்தது.
டீசர் வெளியிடப்பட்டுள்ள இரு மாடல்களும் சர்வதேச அளவில் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு அனேகமாக ஜனவரி 2025 முதல் கிடைக்க துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.