பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் குறைந்த விலை 125 சிசி மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்த சிடி 125 எக்ஸ் (ct 125x) மாடல் இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முதலில் மிக குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்த இந்த மாடலானது சில மாதங்களில் எவ்விதமான எண்ணிக்கையும் பதிவு செய்யாமல் இருந்த நிலையில் தற்பொழுது புதிய பல்சர் என்125 மற்றும் ஃபிரீடம் 125 சிஎன்ஜி என இரு மாடல்களின் அறிமுகத்திற்குப் பின்னர் முற்றிலும் நீக்கப்பட்டு அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்த பக்கம் தற்பொழுது இல்லை.
தற்பொழுது பஜாஜின் சிடி வரிசையில் 110x மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
CT125X பைக்கில் 124.4cc அதிகபட்சமாக 10.9 bhp பவர் 11 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டு, டபூள் கார்டிள் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் உடன் 125 எக்ஸ் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் பஜாஜ் CT 125X பைக் விலை ரூ 74,240 முதல் ரூ.77,440 விற்பனை செய்யப்பட்டு வந்தது. (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)