சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய பாசால்ட் எஸ்யூவி 4 ஸ்டார் ரேட்டிங்கை சமீபத்தில் நடத்தப்பட்ட பாரத் கிராஸ் டெஸ்ட் சோதனை முடிவுகளில் இருந்து பெறப்பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் என இரண்டு விதமாக நடைபெற்ற சோதனையிலும் 4 நட்சத்திரத்தை பெற்றுள்ளது.
Citroen Basalt BNCAP Results
வயது வந்தோர் பாதுகாப்பில் பெறவேண்டிய மதிப்பெண் 32-ல் 26.19 பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், குழந்தைகளின் பாதுகாப்பு 49-ல் 35.90 என மதிப்பிடப்பட்டது.
2024 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் மாறுபாடுகளில் டர்போ-பெட்ரோல் மாடல்களுக்கான பிளஸ் மற்றும் மேக்ஸ் டிரிம்களுடன், NA பெட்ரோல் வகையிலான யூ மற்றும் பிளஸ் வேரியண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கூடுதலாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் நடத்தப்பட்ட நகரும் போது மோதல் மற்றும் போல் மோதல் என இரண்டிலும் சிறந்த முறையில் தரமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்புற மோதலின் போது ஓரளவு பாதுகாப்பு வழங்குவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிட்ரோயன் பாசால்ட் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூபாய் 9.79 லட்சம் முதல் ரூபாய் 17.45 லட்சம் வரை அமைந்துள்ளது.