டாடா குழுமத்தின் எமரிட்டஸ் தலைவர் திரு. ரத்தன் டாடா (28-12-1937 – 09-10-2024) அவர்கள் தனது 86 வயதில் உடல் நலக்குறைவால் மும்பையில் மருத்துவமனையில் மறைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உப்பு, டீத்தூள், மென்பொருள், ஆடம்பர கார்கள் என மிகப் பெரிய டாடா தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவராகவும், டாடா குழுமத்தின் 1991 முதல் 2012 வரை தலைவராக இருந்தார்.
குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஜாகுவார் லேலண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இன்றைக்கு டாடாவின் இன்டிகா வர்த்தகரீதியான பயன்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
ஆட்டோமொபைல் உலகின் தொழில்நுட்ப ஆச்சரியமாக அறியப்படுகின்ற டாடா நானோ கார் உருவாக்கியதில் முக்கிய பங்கு, விற்பனை செய்ய முடிவெடுத்த பயணிகள் வாகனப் பிரிவை இன்றைக்கு இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான பிராண்ட் மாடாலாக டாடா மோட்டார்ஸ் உருவாகுவதற்கு மிக முக்கியமானவர்.
இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா குழுமத்தை மட்டுமல்லாது, நாட்டிற்கும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து, உண்மையிலேயே அசாதாரணமான தலைவரான திரு. ரத்தன் நேவல் டாடாவிடம் நம்மிடம் இருந்து விடைபெற்றுள்ளார். டாடா குழுமத்திற்கு, அவரது வழிகாட்டுதலின் கீழ், உலகளாவிய சந்தைகளில் விரிவுபடுத்தியதற்கு அவரது வழிகாட்டல் மிக முக்கியமான ஒன்றாகும்.”
திரு. டாடா அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள், டாடா குழுமத்தின் ஊழியர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை ஆட்டோமொபைல் தமிழன் தெரிவித்துக் கொள்கிறது.