மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து கதவுகளை பெற்ற ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலின் முதல் Thar ROXX #1 என்ற எண் கொண்டுள்ள மாடல் ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் ₹ 1.31 கோடியில் மின்டா கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் மின்டா எடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15 முதல் 16, 2024 வரை carandbike இணையதளத்தில் நடைபெற்ற ஏலத்தில், 10,980 பதிவுகளைப் பெற்ற நிலையில் இறுதியில் 20க்கு மேற்பட்ட ஏலதாரர்களை பங்கேற்றனர்.
ஏழு நிறங்களில் நெபுலா ப்ளூ நிறத்தைத் மின்டா தேர்ந்தெடுத்தார். மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சிஎம்ஓ, மஞ்சரி உபாத்யே, புது தில்லியில் டெலிவரி செய்த எஸ்யூவி, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கையொப்பமிட்ட பிரத்யேக பேட்ஜும், 001 என்ற அலங்காரப் பிராண்டிங் பிளேட்டும் கொண்டுள்ளது.
ஏலத்தில் கிடைத்த தொகையை இரட்டிப்பாக்கி மஹிந்திரா நிறுவனம் நந்தி அறக்கட்டளைக்கு வழங்கி சமூக சேவைகளுக்கு பயன்படுத்த உள்ளது.
முதல் 60 நிமிடத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவை பெற்ற தார் ராக்ஸ் அமோக வரவேற்பினை பெற்று ரூ.13 லட்சம் முதல் ரூ.22.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது.
மேலும், மஹிந்திரா தார் மற்றும் தார் ராக்ஸ் என இரண்டின் உற்பத்தி ஆண்டுக்கு 70,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,10,000 ஆக உயர்த்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. எனவே, மாதந்தோறும் 9,500 ஆக உற்பத்தி எண்ணிக்கையை ஜனவரி 2025 முதல் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.