ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்ட எடிசனை வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் தற்பொழுது ஜிடி லைன் மற்றும் ஜிடி பிளஸ் ஸ்போர்ட், என இரு வேரியண்டுகள விர்டஸ் மாடலும், கூடுதலாக இரு மாடலிலும் ஹைலைன் பிளஸ் வேரியண்ட் வெளியனது
தொடர்ந்து எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.0 லிட்டர் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின் என இரு ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.
Virtus GT Line
கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்ககப்பட்டுள்ள விர்டஸ் ஜிடி லைன் வேரியண்டில் கறுப்பு அலாய் வீல், பிளாக்-அவுட் கிரில், கூரை மற்றும் விங் மிரர், கருப்பான குரோம் கதவு கைப்பிடிகள் மற்றும் ஒரு பளபளப்பான கருப்பு ஸ்பாய்லர். ஜிடி லைன் பேட்ஜ்கள் ஃபெண்டர்கள் மற்றும் பூட்களில் உள்ளது.
இன்டீரியரில் கருமை மற்றும் கிரே நிற தையல்களை பெற்று சன்ரூஃப், 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் பனி விளக்குகள், சிவப்பு ஆம்பியன்ட் விளக்குகள், அலுமினியம் பெடல்கள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளது.
Virtus GT Plus Sport
வெளிப்புறத்தில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 1.5 லிட்டர் பெற்றுள்ள இந்த வேரியண்டில் சிவப்பு நிற “ஜிடி” பேட்ஜ் உட்பட பல்வேறு இடங்களில் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிவப்பு நிற பிரேக் காலிப்பர், டூயல்-டோன் கூரை மற்றும் ஏரோ கிட், காற்றோட்டமான மற்றும் எலெக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், சிவப்பு தையல் கொண்ட கருப்பு லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது.
Taigun GT Line
ஏற்கனவே சந்தையில் உள்ள 1.0 லிட்டர் எஞ்சின் பெற்ற டைகன் ஜிடி லைன் வேரியண்டில் கூடுதலாக 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், அலுமினியம் பெடல்கள், ரெயின்-சென்சிங் வைப்பர் மற்றும் தானியங்கி ஹெட்லேம்ப் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
Taigun and Virtus Highline plus trim
கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள ஹைலைன் பிளஸ் வேரியண்ட் ஆனது இரண்டு மாடலிலும் பெற்று 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ-டிம்மிங் IRVM, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஃபாலோ-மீ-ஹோம் லைட்டிங் செயல்பாடு 1.0 லிட்டர் எஞ்சினில் மட்டும் வந்துள்ளது.
2024 ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மாடலின் விலை ரூ. 11.56 லட்சம் முதல் ரூ. 19.41 லட்சம் ஆகவும், டைகன் விலை ரூ. 11.70 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை அமைந்துள்ளது. (எக்ஸ்-ஷோரூம், இந்தியா).