டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2 kWh மற்றும் 3.4 kWh என இருவிதமான பேட்டரிக்கு மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டு டாப் 5.1 kWh பேட்டரிக்கு சலுகை வழங்கப்படவில்லை.
ஐக்யூப் 2.2 kWh, ஐக்யூப் 3.4 kWh,மற்றும் ஐக்யூப் S 3.4 kWh என மூன்று மாடல்களுக்கும் ரூ.17,300 வரையும், ஐக்யூப் 3.4 kWh மாடலுக்கு ரூ.20,000 வரை சலுகை கிடைக்கும். கூடுதலாக ரூ.5,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமாக 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ வரை கிடைக்கின்றது.
TVS iQube Price list
- iqube 09 (2.2Kwh) – ₹ 1,08,042
- iqube 12 (3.4Kwh) – ₹ 1,37,363
- iqube S (3.4Kwh) – ₹ 1,47,155
- iqube ST 12 (3.4Kwh) – ₹ 1,56,290
- iqube ST 17 (5.1Kwh) – ₹ 1,86,108
(All price ex-showroom Tamil Nadu)