கடந்த ஜூன், 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் , HF டீலக்ஸ், கிளாமர் போன்ற பைக்குகள் முன்னிலை வகிக்கின்றது.
இந்தியாவின் நெ.1 இருசக்கர வாகனம் மதிப்பினை ஸ்பிளெண்டர் இழந்திருந்தாலும் பைக்குகள் பிரிவில் ஹீரோ ஸ்பிளென்டர் 2,04,609 பைக்குகளை விற்று முன்னிலை வகிக்கின்றது. அதனை ஹீரோ HF டீலக்ஸ் , ஹீரோ கிளாமர் மற்றும் பேஸன் பைக்குகள் முதல் 4 இடங்களை பட்டியலில் பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோவின் 4 பைக்குகள் பட்டியலில் உள்ளது. அவை பஜாஜ் சிடி100 , பல்சர் 150 , பிளாட்டினா மற்றும் பஜாஜ் வி15 ஆகிய பைக்குகள் உள்ளன. ஹோண்டா சிபி ஷைன் 5வது இடத்திலும் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாக் 350 8வது இடத்தில் உள்ளது.
10வது இடத்தை பிடித்துள்ள பஜாஜ் வி15 மிக சிறப்பான வரவேற்பினை பெற்று கடந்த 4 மாதங்களில் 1 லட்சம் வி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 74,999 மொபட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை காண கீழுள்ள அட்டவனையில் பார்க்கலாம்.
automobiletamilan.com
டாப் 10 பைக்குகள் ஜூன் 2016
வ.எண் | மாடல் விபரம் | ஜூன் 2016 |
1. | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,04,609 |
2. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,06,486 |
3. | ஹீரோ கிளாமர் | 80.348 |
4. | ஹீரோ பேஸன் | 76,639 |
5. | ஹோண்டா சிபி ஷைன் | 74,286 |
6. | பஜாஜ் சிடி 100 | 43,049 |
7. | பஜாஜ் பல்சர் 150 | 31,491 |
8. | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 28,926 |
9. | பஜாஜ் பிளாட்டினா | 26,883 |
10. | பஜாஜ் வி15 | 26,482 |