புதிய நிறங்களுடன் பாடி கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு 2024 ஆம் ஆண்டிற்கான டிவிஎஸ் மோட்டார் என்டார்க் 125 மற்றும் என்டார்க் ரேஸ் எக்ஸ்பி என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியாகி உள்ளன.
2024 TVS Ntorq 125
இந்தியாவின் 125சிசி சந்தையில் மிகவும் பிரீமியம் ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட் தோற்ற அமைப்பு என பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த மாடல் ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற ஸ்போர்டிவ் ஸ்டைல் பெற்ற சுசூகி அவெனிஸ், ஹோண்டா டியோ 125, ஏப்ரிலியா SR125 மற்றும் வரவிருக்கும் ஹீரோ நிறுவனத்தின் ஜூம் 125ஆர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
புதிதாக ப்ளூ, கிரே மற்றும் டர்க்கைஸ் என மூன்று விதமான நிறங்களை என்டார்க் 125 பெறுகின்ற நிலையில் அடுத்து என்டார்க் XP மேட் கருப்பு நிறத்துடன் புதுப்பிக்கப்பட்ட ரேசிங் பாடி கிராபிக்ஸ் பல்வேறு இடங்களில் டெக்ஸச்சர் பெற்றுள்ளது.
எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.
என்டார்க் 125 ஸ்கூட்டரில் CVTi-REVV 124.79 சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500Rpm-ல் வழங்குவதுடன், அதிகபட்சமாக 5,000RPM-ல் 10.6 Nm டார்க்கினை வழங்குகின்றது.
என்டார்க் 125 ரேஸ் XP ஸ்கூட்டரில் CVTi-REVV 124.79 சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 10bhp ஆற்றலை 7,500Rpm-ல் வழங்குவதுடன், அதிகபட்சமாக 5,500RPM-ல் 10.8 Nm டார்க்கினை வழங்குகின்றது.
ரேஸ் XP வேரியண்டில் இரண்டு ரைடிங் மோடு மற்றும் 20 க்கும் மேற்பட்ட வாய்ஸ் கண்ட்ரோல் செயல்பாடுகள், மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் அமைப்பு உட்பட பல அம்சங்களுடன் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள், லேப் டைமர், ஆக்சிலிரேஷன் டைமர் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றையும் பெறுகிறது.
கம்பைன்டு பிரேக்கிங் அமைப்புடன் (SBT) 220 மிமீ முன்புறத்தில் டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மூலம் பிரேக்கிங், 130 மிமீ பின்புற டிரம் பிரேக்குடன் வருகின்றது. முன்பக்கத்தில் 100/80-12 டயர் மற்றும் பின்புறத்தில் 110/80-12 டயர். உள்ளது.
பேஸ் என்டார்க் 125 விலை ரூ. 86,871 மற்றும் ரேஸ் எக்ஸ்பி ரூ. 97,501 வரை அமைந்துள்ளது.
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)